சினிமா

சொந்த ஊரில் சூரியின் அலப்பறைகள்

‘காலா னா கருப்பு’ எனத் தலைவர் ரஜினிகாந்த் பட்டைய கிளப்பி இருப்பாரு. சூரிய படத்துல லுங்கி வேஸ்டினு பல கெட்டப்ல பார்த்திருப்பீங்க. சமூக வலைத்தளங்கல தற்போது வைரலாகி வரும் சூரியின் காலா கெட்டப் அடி தூள்.

சென்னையில சூரி தன்னுடைய குழந்தைகளுடன் செய்த அலப்பறைகள் அனைவருக்கும் மகிழ்ச்சி கொண்ட பொழுதுபோக்காக அமைந்தது. அதனைத் தொடர்ந்து எப்போ விடுவாங்க எப்போ ஓடலாம்னு காத்திருந்த சூரி. தன்னுடைய சொந்த ஊரான மதுரைல இருக்க ராஜாக்கூருக்கு கிளம்பிட்டாரு.

கிளம்பிட்டாங்கய்யா! கிளம்பிட்டாங்கய்யா!

சூரி ஊருக்கு போன உடனே தன்னோட காளைய கூட்டிட்டு ஊர ஒரு வலம் வந்துட்டாரு. கருப்பன் என்கிற அந்த காளைய கயிறு கட்டி இழுத்து வர சூரியன் கம்பீரம் இருக்கே அப்பப்பா…

அப்படியே ரீவைண்ட் பண்ணி போன வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வந்து போற மாதிரி இருக்கு. ரீல் லைஃப்ல மட்டும் கிராமத்து வாசியாக இல்லாம ரியல் லைஃப்லயும் இவர் ஒரு கிராமத்து சிங்கம் காமிச்சுட்டாரு.

கருப்பன்ன பத்தி சொல்லியே ஆகணுங்க. சூரி கிராமத்து சிங்கம்னா இவரு ஜல்லிக்கட்டை சிங்கம். நம்ம தூங்கா நகரமான மதுரைக்கு பெயர்பெற்ற ஜல்லிக்கட்டுல கருப்பன் பரிசு பெறாத வருஷம் இல்லையாம். கருப்பன் வாடி வாசலை தொட்டு இறங்கினா கருப்பு நெருங்கற்துக்கு ஒவ்வொருத்தரும் பயப்படுவாங்களாம்.

கிராமம்னு சொன்னவுடனே அவங்களோட உடையை பத்தி யோசிச்சோம்னா வேட்டி சட்டை தான் ஞாபகம் வரும். அப்படிதாங்க சூரியன் வேட்டி சட்டையில் பிரமாதமா போஸ் கொடுத்திருக்கிறார்.

ஆனா அந்த வேட்டி சட்டை தான் ஹைலைட். கருப்பு கலர் வேட்டியும் வெள்ளை கலர் சட்டையும் சும்மா காலா படத்தில் வர நம்ம தலைவரு மாதிரி போஸ் கொடுத்திருக்கிறார் சூரி. கிராமத்து வாசி என் முகக் கலையும் பிரகாசமாக இருக்கு. மீசை தாடி என்ன சும்மா சூப்பரா இருக்காருங்க.

தல அஜித்தோட சால்ட் அன்ட் பெப்பர் டை அடிக்காமல் ஸ்டைல நேச்சுரலா போஸ் கொடுத்திருக்காரு சூரி. அடுத்த முக்கியமான விஷயம் அதுக்கு அவர் கூறியிருக்க வரி தான்.

‘கொரோனாவை வெல்வோம்; தரமாக வாழ்வோம்’

கெத்தா ஸ்டைலா போட்டோ மட்டும் இல்லாம அதுக்கான கேப்ஷனும் செம்மையா கொடுத்திருக்காரு. தரமான சம்பவம் காத்திருக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *