சூரரைப் போற்று நாயகிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சூரரைப் போற்று கதாநாயகி அபர்ணா பாலமுரளிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இவங்க இதுக்கு முன்னாடி என்னென்ன படம் நடிச்சிருக்காங்கன்னு தெரியுமா! வாங்க அவங்கள பத்தி தெரிஞ்சுக்கலாம்.
அபர்ணா பாலமுரளி
11 செப்டம்பர் 1995ல கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்து இருக்காங்க அபர்ணா பாலமுரளி. இவர்களோடு தந்தை கே. பி. பாலமுரளி இசையமைப்பாளர் ஆவார். இசை மற்றும் நாட்டிய கலை பயின்றவர் அபர்ணா. பாரம்பரிய இசை கலையான கர்நாட்டிக் இசை மற்றும் நடனக் கலையில் பரதநாட்டியம் குச்சுப்புடி மோகினி ஆட்டம் என பல திறமைகளைத் தன்னகத்தே புதைத்து வைத்திருக்கும் திறமைசாலி.
இசை பயின்று இசை அமைப்பாளரை தந்தையாக கொண்டவர் பாடல் இருக்க முடியுமா! திரையுலகில் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகராக இருக்கிறார் அபர்ணா பாலமுரளி.
2013ல் மகள் கதாபாத்திரத்தில் நடித்த பின் 2015 கதாநாயகியாக அறிமுகமானார். 2016 மகேஷிந்தே பிரதிகாரம் என்ற மலையாளப் படம் மூலம் பிரபலமானார் அபர்ணா பாலமுரளி.
அதுக்கு அடுத்த வருடமே தமிழ் திரையுலகில் 7 தோட்டாக்கள் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தில் பின்னணி பாடகராகவும் பணிபுரிந்துள்ளார். 2019ல் சர்வம் தாளமயம் படத்தில் ஜீ. வி. பிரகாஷுடன் இணைந்து நடித்தார்.
தற்போது அனைவரும் எதிர்பார்க்கும் சூரரை போற்று படத்தில் சூர்யாவிற்கு துணை கதாநாயகியாக பட்டையைக் கிளப்புகிறார் அபர்ணா பாலமுரளி. இது தமிழில் இவருக்கு மூன்றாவது திரைப்படம்.
நான் உனக்கு யானப் பசி
நீ எனக்கு சோளப்பொறி
கோடிக்கணக்கானவர்கள் பார்வையிட்டு பல நாட்களாக யூடியூப் ட்ரெண்டிங்கில் இருக்கும் மஜாவான பாடல்.
எதிர்பார்ப்பைத் தூண்டும் அளவிற்கு படம் வெற்றியடையவும் பிறந்த நாள் வாழ்த்தும் அபர்ணா பாலமுரளிக்கு மக்களின் சார்பாக சிலேட்குச்சி தெரிவிக்கிறது.