சினிமா

கொரோனாவால் கஷ்டத்துல இருக்குற மக்களை காப்பாற்றும் சோனு சூத்

நாடோடிகள் மட்டும் இல்லங்க அந்தந்த ஊரிலியே இருந்து வரும்படியும் இல்லாமல் திண்டாடும் பல மக்களுக்கு கண்கண்ட தெய்வமாக திகழ்ந்தாரு சோனு சூத். என்னப்பா தெய்வம்னு சொல்றீங்களே அப்படி நினைக்கிறீங்களா!

ஆமாங்க கஷ்டத்துல இருக்குற ஏதாவது ஒரு மனிதருக்கு உதவினால் அவங்கள கடவுளாக பார்க்கும் உலகம் இது. அந்த உலகத்துல கஷ்டப்படுற ஒவ்வொருத்தரையும் தேடித்தேடி உதவுரவர தெய்வம் ன்னு சொல்லலனா எப்படி!

சிலம்பரசி

வடமாநிலத்தில சிலம்பம் சுத்துற பாட்டிய பல பேரு இணையதளத்தில் பார்த்திருப்பீங்க நேரிலையும் பலபேர் பார்த்திருக்கலாம். எல்லாரும் அவங்க அவங்களால முடிஞ்ச உதவிய அந்த பாட்டிக்கு செஞ்சாங்க. ஆனா அந்த ஒரு பாட்டிய பொக்கிஷமா கருதினார். வருங்கால சந்ததிக்கு இந்த கலைய இவங்களால கொண்டுபோய் சேர்க்க முடியும்னு நினச்சாரு சோனு சூத்.

விவசாயி:

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் பலருண்டு. ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்த்தைச் சேர்ந்த மதனபப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தேநீர் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்திருக்கின்றார். கொரோனா காரணமாக அவரால் கடையை நடத்த முடியாததால் அவர் டீக்கடையை மூடிவிட்டு குடும்பத்துடன் கிராமத்திற்கு சென்றுள்ளார். கிராமத்தில் பயிரிட நிலம் உழுவதற்கு தேவைப்படும் எருது அல்லது டிராக்டர் வாங்க வழியின்றி இருந்துள்ளார். அவருடைய இரு பெண் பிள்ளைகள் தந்தைக்கு உதவ மாடுகளுக்குப் பதிலாகக் கலப்பையை இழுக்கும் காட்சியானது பெரும் அளவில் சோசியல் மீடியாவில் வைரலானது. இதனைக் கண்டு பலர் மனம் வருந்தியுள்ளனர்.

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கிற விவசாயி. இத தெரிஞ்ச சோனு சூத் அந்த எருத மீட்டுத்தரனும்னு நினைக்காம ஒரு படிமேல் யோசிச்சு ட்ராக்டரையே வாங்கி கொடுத்து இருக்காரு.

வேலை இழந்த மங்கை

ஊரடங்கு வந்ததிலிருந்து வீட்டுல இருந்து வேலை செய்ய சொன்னாங்க. கொஞ்ச நாள் கழிச்சு சம்பளத்தில் கை வச்சாங்க. அதுக்கப்புறமா ஆள தூக்க ஆரம்பிச்சாங்க. இப்படி நிரந்தர இல்லாம பலபேர் எப்போ வேலை போகும் பயந்துட்டேன் வேலை செஞ்சுட்டு இருக்காங்க.

அப்படி பாதிக்கப்பட்ட ஒரு ஹைதராபாத் பொண்ணு தன்னோட வேலையை இழந்து தெருவுல காய்கறி போட்டு வணிக செய்யற நிலம ஆயிடுச்சு. எப்படி வாழ்ந்தாலும் உழைத்து வாழணும்னு அந்தப் பெண்ணோட எண்ணத்தை பாராட்டுவதற்கு நமக்கு வெறும் வார்த்தை தாங்க இருக்கு ஆனா சோனு சூத் வேற லெவல்ல யோசித்திருக்கிறாரு‌. அந்த மங்கைக்கு மற்றொரு வேலைய உடனே பெற்று தந்து இருக்காரு நம்ம ஹீரோ.

துணை நடிகர்

ஹிந்தி திரை உலகத்தில துணை கதாபாத்திரத்தில நடிக்கும் அனுபம் ஷாமிற்கு உடல்நலம் பாதிச்சு டயாலிசிஸ் செஞ்சிட்டிருக்காங்க. உறவினர்களும் சினிமா துறையினரும் பணம் கொடுத்து உதவி வர மருத்துவமனையில சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யனும்னு சொல்லிட்டாங்க. கட்டுப்பாடு இருக்க நலமா என்னால இணையதளங்களில் இந்த செய்தி பரவி வர சோனு சூத் காதுக்கும் எட்டியிருக்கு. மொத்த செலவையும் தானே செய்யறேன்னு சொல்லிட்டாரு சோனு சூத்.

உயர்ந்த மனிதரா எல்லார் மனதிலும் இடம் பிடிச்சுட்டாரு சோனு சூத். மக்களே அவருக்கு மனமார்ந்த நன்றியும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்களையும் நீண்டநாள் நோய்நொடியற்று வாழ்வாங்கு வாழ இறைவனை பிரார்த்தன செஞ்சுக்கோங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *