கொரோனா கொடூரங்களிடமிருந்து மக்களை காப்பாற்றும் சோனு சூத்
கொரோனா ஊரடங்கு காலகட்டத்துல பெருசா பாதிக்கப்பட்டது நாடோடிகள். பொழப்புக்காக மட்டுமே மற்றொரு ஊருக்கு வந்து மாட்டிக்கிட்ட மக்கள் எங்க போவாங்க? என்ன செய்வாங்க? எப்படி வாழ்வாங்க? இப்படி பல கேள்விகளுக்கு பதிலா அமஞ்சாரு சோனு சூத்.
சோனு சூத் உதவி தொலைபேசி எண்ணை தயாராகி ஒரு குழுவை அமைச்சு தன்னோட உதவும் பணியை தொடங்கினாரு. அங்கங்க மாட்டிக்கிட்டு தவிக்கிற நாடோடி மக்களுக்கு அடிப்படையா தேவைப்படுற உணவு தண்ணீர் கொடுத்து அதுக்கப்புறமா அவங்க அவங்க ஊருக்கு போறதுக்கு தேவையான ஏற்பாடுகளை செஞ்சாரு சோனு சூத்.
எந்தவிதமான போக்குவரத்தை இருந்தாலும் ஏற்பாடு பண்ண தயாராக இருந்தாரு. பேருந்து ரயில் மட்டுமில்லாம சாட்டட் ஃபலைட் சொல்லப்படுற விமானப் போக்குவரத்து கூட ஏற்பாடு செஞ்சு கொடுத்தாருனா பாத்துக்கோங்களேன். இந்த விமான வசதி மூலமா கிர்கிஸ்தானுல மாட்டிட்டு இருந்த மக்கள வாரணாசிக்கு கொண்டு போய் சேர்த்தாரு.
நல்ல ஒரு ஏசி ரூம்ல உட்கார்ந்து அவர் ஏற்பாடு பண்ண குழு மட்டும் வேலை செய்யறாங்க. இவரும் களத்துல இறங்கி எல்லாருக்கும் உதவி பண்ணி இருக்காரு. எல்லாரும் ஊருக்குக் கிளம்பும்போது வழி அனுப்ப டாட்டா சொல்ல யாராச்சும் இருப்பாங்களா என்கிற அந்த மக்களுக்கு இவரு டாட்டா காமிச்சி அனுப்பி வைக்கிறார். அது மாதிரி ஒரு சமயத்துல ரயில்ல உட்கார்ந்திருக்க பயணிகளுக்கு டாட்டா காமிச்சுட்டு வரும்போது நாலு பசங்க முகக்கவசம் இல்லாமல் இருந்ததுக்கு ‘அவங்க முகக்கவசம் எங்கனு’ கண்டிப்பா கேட்டிருக்காருனா பார்த்துக்கோங்க. நம் நாடு நம் மக்கள் எண்ணம் கொண்ட உயர்ந்த மனிதருக்கு ஹேட்ஸ் ஆப்ங்க.
அனைவருக்கும் மனிதர்களுக்கு நல்லதா நாலு வார்த்த பேசினாலே பெரிய உதவியா இருக்கும். அந்த மாபெரும் உதவிய செஞ்சு மாமனிதரா திகழ்ராறு சோனு சூத்னு சொன்னா மிகையாகாதுங்க. அவர் களத்தில இறங்கி உதவி செய்யும் போது ஒவ்வொரு மக்களும் அவங்களுடைய கதைய மனமார இவர்கிட்ட பகிர்ந்து இருக்காங்க.
ரீல் உலகத்துல செம வில்லனா பார்த்தவங்களுக்கு இவ்விரு இப்படிப்பட்டவரா அப்படின்னா ஆச்சர்யத்தை தந்து இருக்காரு சோனு சூத். ரீல் உலகத்துல வில்லனாவும் ரியல் உலகத்துல ஹீரோவாவும் இருக்கிறவரை கூடிய சீக்கிரத்துல கதாசிரியராகவும் மாறப் போறாருங்க. புத்தகம் படிக்கும் வாசகர்களே உங்களுக்கு ஒரு நல்ல புத்தகம் கூடிய விரைவில் வரப்போகுதுன்னு நீங்க எல்லாம் ரொம்ப சந்தோஷமாவே காத்திருக்கலாம்.