மாணவர்களுக்காக களமிறங்கியுள்ள சோனு சூட் !
சோனு சூட்டின் அடுத்த அதிரடி நடவடிக்கை தொடங்கிவிட்டது. நீட் தேர்வு தொடர்பான நீண்ட விவாதத்தில் மாணவர்கள் சார்பாகச் சோனு சூட் களமிறங்கியுள்ளார். கடந்த 8 மாதமாக வாட்டி வதைத்து வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கின்றனர். பெரும்பாலான மாணவர்கள் பெற்றோர்களுடன் இடம்பெயர்ந்து இருக்கின்றனர். பல நல்ல படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழலில் வசித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாடு முழுவதும் நடக்கும் நுழைவுத்தேர்வு ஜெ.இ.இ மற்றும் நீட் தேர்வுகளைச் சோனு சூட் அவர்கள் மாணவர்களின் சூழல் கருதி அரசைத் தள்ளி வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கின்றார். வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி ஜே.இ.இ பிரைமரி தேர்வாகச் செப்டம்பர் 1 முதல் 6 வரை நடைபெற இருக்கின்றது. இந்தத் தேர்விற்கு பலமாணவர்கள் தயாராகாத சூழ்நிலையில் இருக்கின்றனர்.
கொரோனா காரணமாக மாணவர்கள் தேர்வு எழுதுவது தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து நடந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் மாணவர்களின் எதிர்காலம் கருதி நெற்றியில் பொட்டில் அடித்துத் தேர்வு நடைபெறும் என்று அறுதியிட்டுக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். கொரோனா பரவி வருவதால் மாணவர்கள் பலர் இடம்பெறுகின்றனர் தேர்வுக்குத் தயாராகும் சூழ்நிலைகள் பல மாணவர்கள் இல்லை என்பது பல தரப்பிலிருந்து தெரிய வருகின்றது.
நடிகர் சோனு சூட் அவர்கள் மத்திய அரசின் ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை வேண்டி ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். அதாவது பொறியியல் மற்றும் மருத்துவம் உயர்க்கல்விக்காக தேர்வு நீட் தேர்வு ஆகியவற்றை எழுதும் சூழலில் பலமாணவர்கள் இல்லை. மாணவர்களின் நிலை கருதி இந்த தேர்வுகளைத் தள்ளி வைக்கலாம் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
மாணவர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமானது இதுகுறித்து நீண்ட ஆலோசித்து அரசு செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றார். சோனுசூட் இந்த வேண்டுலுக்கு விடை கிடைக்குமா என்று பொறுத்திருந்து பார்த்தாள் தெரியவரும்.
கொரோனா தொடங்கிய காலம் முதல் தற்போது வரை தீயாய் பரவி வேலை செய்து வருகின்றார். நமது சோனு சூட் அவர்கள் தற்போது மாணவர்களுக்காகவும் களமிறங்கி கோரிக்கை வைத்துள்ளார் அரசு இதுகுறித்து என்ன செய்யும் என்று பொறுத்திருந்து பார்ப்போம் இந்த 5 மாதத்தில் நடிகர் சோனு சூட் அவர்களின் பொறுப்புணர்வு என்பது உதவியாக இருக்கின்றது. அனைத்து துறை சார்ந்த சாமானிய மனிதர்களையும் இந்த மனிதர் பெரிதாக அணுகியிருக்கிறார். அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட காரணமாக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.