சோனு சூத் சரித்திரம் தொடர்கிறது
எப்ப யாருப்பா நீ! எங்க இருந்துப்பா வர! இவ்ளோ நல்லவரா இருக்கியேப்பா! இந்திய தேசத்தில் சுத்தி சுத்தி கேக்குற வார்த்தை. திரையுலக பிரபலமாக இருந்தாலும் சோனு சூத் அப்படிங்கற பேர கேட்டா மார்ச் மாசத்துக்கு முன்ன வர எவ்வளவு பேருக்கு தெரியும் தெரியல. ஆனா இப்போ தேசத்துல எல்லாருமே அவரப் பத்தி தெரிஞ்சு அறிஞ்சு பெருமையா பேசுறாங்க.
அப்படி இவரு என்ன செஞ்சார்? அப்படின்னு கேக்குறவங்களுக்கு ஒரு சிறிய குறிப்பு இதோ.
கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்ட பிறகு அங்கங்க மாட்டிகிட்ட வேற்று மாநிலத்தில் இருந்து பணி புரிய வந்த மக்கள்ல அவங்க அவங்க மாநிலத்துக்கு திரும்ப அனுப்பி வச்சிருக்காரு. பேருந்து ரயில் மட்டுமில்லாமல் சார்ட்டட் ஃப்லைட் கூட ஏற்பாடு பண்ணி கொடுத்திருக்கிறாரு.
இந்த செய்தியை தெரிஞ்சுகிட்ட வெளிநாடுகள்ல மருத்துவம் படிக்க சென்ற நம்ம நாட்டு பசங்க நம்ம நாட்டுக்கு திரும்ப வரத்துக்கு இவர்கிட்ட உதவி கேட்க முடிவு செஞ்சிருக்காங்க. இவங்கள சார்ட்டட் ஃப்லைட் மூலமா சென்னை கொண்டு வந்து சேர்த்திருக்கிறாரு சோனு சூத்.
ரஷ்யால பல இடங்கள்ல மாட்டி தவித்த மருத்துவர்கள் தன்னுடைய தாய்நாட்டுக்கு திரும்பின சந்தோஷத்தோடு இருக்கிற டாக்டர்கள் அவங்களோட இந்த பயணத்திற்கான விஷயங்களை சொல்றாங்க.
“நாங்கள் எல்லாரும் அரசு ஏற்பாடு பண்ண வந்தே மாத்திரம் பணிக்காக காத்திருந்தோம் ஆனால் எங்களோட படிப்பும் பட்டமளிப்பு விழாவும் முடியறதுக்கு முன்னாடியே இந்தப் பணி ஏற்பாடு செஞ்சதுனால எங்களால அந்த பணில நம்ம நாட்டுக்கு திரும்ப முடியல. இத விட்டுட்டு அடுத்து எப்பவாது வேற விமானத்துல நம்ம நாட்டுக்கு திரும்ப வந்துகளாம்னு நாங்க முடிவு எடுத்தது தப்பா போச்சு.
ரஷ்ய அரசாங்கம் எங்களோட விசா காலத்தை செப்டம்பர் 15 வரைக்கும் நீட்டிப்பு செஞ்சு கொடுத்தாலும் நாங்க ஆகஸ்ட் இறுதியில் நடக்க இருக்க வெளிநாட்டு மருத்துவ பட்டப்படிப்பு தேர்வுக்கு முன்னாடி நம்ம நாட்டுக்கு வரணும்.” விரிவிச்சாங்க டாக்டர் டி.ஆர் சக்தி பிரியதர்ஷினி.
மருத்துவ மாணவர்களோட தேர்வுகள் ஜூலை மாதம் முடிவடைஞ்ச பிறகு பல வழிகள்ல நாட்டிற்கு திரும்ப தேடி இருக்காங்க. இந்த கொரோனா தொற்றுனால விமானம் ஊர் ஊரா சுத்தி வந்தா பல பிரச்சனைகளுக்கு ஆளாவோம் என்று தெரிந்து இருந்தாங்க மருத்துவர்கள். ஜூலை 22 ஆம் தேதி சோனு சூத் இவங்களோட கோரிக்கையை தெரிந்து பதிலளித்திருக்காரு.
“நான் ரொம்ப சாதாரணமான மனுஷன் அமைச்சர்கள் எம்பஸ்ஸி இப்படி பல பேரோட கலந்து ஆலோசித்து இந்த மருத்துவர்களுக்காக என்னால முடிஞ்ச உதவியை நான் செஞ்சிருக்கேன். அவங்க என் மேல் வைத்திருந்த நம்பிக்கை என்ன இன்னும் ஊக்குவித்தது. நான் ‘தமிழ் எவ்வாறு கற்க வேண்டும்’ புத்தகத்தோட சென்னைக்கு இரயில் ஏறி வந்து திரையுலகப் பயணம் தொடங்கினேன். இவங்க என்ன தேடி வந்து உதவி கேட்டபோது உதவி செய்ய ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது.” சோனு சூத் எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் சூப்பரா பேட்டி கொடுத்து இருக்காரு.
200 நபர்கள் பயணிக்கும் சார்ட்டட் ஃப்லைட் ஏற்பாடு செஞ்சாரு ஆனா 101 மருத்துவர்கள் மட்டுமே இருந்தாங்க. அதுல 100 பேர் சென்னைக்கும் ஒருத்தர் டெல்லிக்கும் வந்து சேரணும். மருத்துவர்கள் அவங்க அவங்களோட பயணத் தொகையை கொடுக்க மீதமிருந்த 99 சீட்டுக்குரிய தொகையை சோனு சூத் அந்த சார்ட்டட் ஃப்லைட் கம்பெனிக்கு கொடுத்திருக்காரு. மருத்துவர்களின் கோரிக்கைப்படி அந்த ஒரு மருத்துவரை டெல்லியில் இறக்கிவிட்டு விமானம் எரிவாயுவை நிரப்பிக்கொண்டு சென்னை வந்திடிச்சு. எல்லாம் மக்களுக்கு ரொம்ப சந்தோஷங்க.