பொம்மாயி வில்லன் சோனு சூத் ஹாப்பி பர்த்டே
சோனு சூத்திற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
பிரபலங்கள் பலபேருக்கு பல துறையில பல தொழில்கள் தெரிஞ்சிருக்கும். அவங்கள பத்தி தெரிஞ்சுக்கணும்னு தேடினோம்னா அவங்க செய்யற தொழில மட்டுமே போட்டிருப்பாங்க சோனு சூத் பத்தி சொல்லனும்னா மனிதாபிமிக்க ஒரு மனிதர் அப்படின்னு குறிப்பிட்டு இருக்கிறது மன நெகிழ்ச்சியுமா மகிழ்ச்சியுமா கோலாகலமா இருக்குங்க.
30 ஜூலை 1973 பஞ்சாப் மாநிலத்தில பிறந்திருக்காரு சோனு சூத். 1999 தன்னுடைய 26வது வயசுல திரையுலகத்தில் தன் பயணத்தை ஆரம்பித்து இருக்காரு. சுவாரசியமான விஷயம் என்னனா தமிழ்த் திரையுலகத்தில் தான் அவர் முதல் அடி வச்சிருக்காரு.
கள்ளழகர் நெஞ்சினிலே என இரு தமிழ் படத்துல நடிச்சுட்டு அப்படியே பக்கத்து மாநிலமான ஆந்திர பிரதேசத்துக்கு போய் தெலுங்கு திரை உலகத்துலையும் படங்களும் செஞ்ச பிறகு 2002 ல தான் ஹிந்தி திரை உலகத்துக்கு போயிருக்காரு.
அஞ்சு வருஷம் மனம் தளராமல் தன்னுடைய திரையுலக பயணத்தை தொடர்ந்தவருக்கு 2004 ல மணிரத்னம் இயக்கிய யுவா படத்தில அபிஷேக் பச்சனுடைய சகோதர கதாபாத்திரம் பெருசா வரவேற்கப்பட்டது. அதுக்கு அடுத்த வருஷமே தெலுங்கு படமான சூப்பரும் ஹிட்டாச்சு.
2008ல வரலாற்று படமான ஜோதா அக்பருல துணை கதாபாத்திரத்தில செம்மையா நடிச்சிருக்காரு. 2009 ல இவரைப் பார்த்து பயப்படாதீர்கள் யாருமே இருக்க மாட்டாங்கங்கிற அளவுக்கு அருந்ததி படத்துல நடுநடுங்க வைச்சிருப்பாரு. அவரு கூப்பிடுற பொம்மாயி இன்னுமு பல பேருக்கு ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கறேன்.
2010ல ஹிந்தி திரையுலகத்தில் வந்ததம்மா 2011 ஒஸ்தியா தமிழ்த் திரையுலகத்தில் வெளியாக அதுவும் பெருசா வரவேற்கப்பட்டதுங்க. 1999-2020 21 வருஷம் திரை உலக வாழ்க்கையில்வருஷத்துக்கு ரெண்டு மூணு படம் நடித்து பல விருதுகளை தட்டிசூப்பரா வெற்றிகரமா தன்னோட பயணத்தை மேற்கொண்டு இருக்காரு சோனு சூத்.
இப்படி எல்லாம் வருஷமும் திரையுலகத்தில சூப்பர் வில்லன்னா ரவுண்டு வந்தவர் கொரோனா காலகட்டத்துல நிஜவாழ்க்கையில் ஹீரோவா வாழராருங்க. ஒரு பிரபலமாக இருந்துட்டு இந்த அளவுக்கு இறங்கி வந்து வேலை செய்யணும்னு இவருக்கு என்ன ஒரு வேகம் எல்லார் மனசுலையும் ஒரு கேள்வியாவே அமைஞ்சிருக்கு.
அப்படி என்ன தாங்க செஞ்சிட்டாரு இவரு! என எதுவுமே தெரியாத பல பேருக்கும்; எல்லாம் தெரிஞ்ச சில பேருக்கும் அடுத்தடுத்த வந்துட்டே இருக்கு பார்த்து தெரிஞ்சுக்கோங்க.