முகம் சும்மா தகதகனு மின்னனுமா..?
முகத்தை சோப்பினால் சுத்தம் செய்வதை தவிருங்கள்..!
முகத்திற்கு சோப்பை பயன்படுத்துவது சருமத்தை நீரிழக்கச் செய்து விடும். இது சருமத்தை வறண்டு போகச் செய்து இறந்த செல்களை அதிகரிக்கிறது. எனவே சரும pH அளவை பராமரிக்கும் விஷயங்களை தேர்ந்தெடுங்கள். மேலும் ஸ்க்ரப் செய்து இறந்த செல்களை நீக்குங்கள்
எண்ணெய் பசையான சருமமா..?
சரிவிகித உணவு உட்கொள்வது அவசியமாகும். எண்ணெயில் பொரித்த உணவுகள், இனிப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், மேக் அப் அதிகமாக போடுவதை தவிர்க்கவும். இப்பிரச்சனை நீடித்தால் மருத்துவரை அணுகவும்.
சரும அழற்சியை போக்கும் விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய் எலிகள் மீது கொண்ட ஆய்வில் அதில் உள்ள ரிகினோலிக் அமிலத்தின் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் எலிகளின் வீக்கத்தை தடுக்க உதவியது. இந்த ஆய்வு மற்ற கினிப் பன்றிகள் மீதும் செய்யப்பட்டது.
சருமத்திற்கு பொலிவை கூட்டும் பால்
உங்கள் சருமத்துக்கு பிரகாசம் தேவையெனில் நீங்கள் பாலேடை பயன்படுத்தலாம். உங்கள் சருமம் ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் அதை பாலேட்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஈடு செய்யும். உங்கள் முகம் பளபளப்பிலிருந்து திரும்ப செய்யும்