பளிச்சென்ற பற்களை பெற உடல் நலத்தை பேண இத செய்றீங்களா! கவனிங்க.
பல வயிற்றுப் பிரச்சினைகள் தடுக்க காலை, இரவு என்று இரண்டு நேரமும் பல் துலக்குவது பலவித நோய்க் கிருமிகள் வயிற்றுக்குள் செல்லாமல் பாதுகாக்க உதவுகிறது. இதனால் பல வயிற்றுப் பிரச்சினைகள் தடுக்கப்படுகிறது. நீண்ட நாட்கள் நாக்கை சுத்தம் செய்யாமல் விட்டால் வெள்ளையான மாவு போன்ற படலம் ஒன்று உருவாகி விடும். பாக்டீரியாக்கள் சேர்ந்துவிடும். இது வாயில் துர்நாற்றம் மற்றும் பல் பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.
எனவே தினமும் வெதுவெதுப்பான தண்ணீரில் வாயைக் கொப்பளிக்க வேண்டும். ஒரு நாளில் இரண்டு முறை கூட நாக்கை சுத்தம் செய்ய க்ளீனரை பயன்படுத்துங்கள். ஆனால் அழுத்தக்கூடாது. நமது வாய் மற்றும் பற்களின் அமைப்புக்கு ஏற்றவாறு டூத் பிரஷ்ஷை தேர்ந்தெடுக்க வேண்டும் இல்லாவிட்டால் பல் ஈறுகளில் இடித்து வலி ஏற்படும். கீறல் விழும்.
விளம்பரங்களில் வருவது போல பிரஷ் நிறைய பேஸ்ட் வைத்து துலக்க வேண்டும் என்று அவசியமில்லை. பற்களுக்கு ஆபத்தானது தான் டூத் பேஸ்ட். முதலில் ஒரு பட்டாணி அளவு பேஸ்ட் பிரஷ்ஷில் வைத்து பல் ஈறுகளுக்கு நேராத பிரஷர் பிடித்துக்கொண்டு சர்குலர் மோஷன் வடிவியல் பிரஷர் அனைத்து பொருட்களின் மீதும் படுமாறு தேய்த்து ஈறுகளை அழுத்தி தேய்க்க கூடாது.
பற்கள் உட்புறங்களிலும் தேய்க்க வேண்டும். முன்னும் பின்னுமாக மெதுவாக தேய்க்க வேண்டும். மேல் பற்கள் மற்றும் கீழ் பற்கள் என்று வாய் முழுவதும் மென்மையாகத் தேய்த்து பிறகு சுத்தமான தண்ணீரை கொண்டு வாய் கொப்பளித்து துப்பவும். நாம் சாதாரணமாக நினைக்கும் இந்த ஒரு செயலால் உடலில் எத்தனை மாற்றங்கள் ஏற்படும் என்று பலருக்கும் தெரியாது.
வாய் சுத்தம், உடல் சுத்தம் என்பதை கருத்தில் கொண்டு முறையாகப் பல் துலக்குவது அவசியம். பல் துலக்குவதில் என்ன முறை வேண்டி இருக்கிறது என்று கேள்வி எழுகிறதா? சரியான முறையில் தூங்காவிட்டால் காலையில் பிரஸும் கையுமாக எழுந்தும் பயனில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தினமும் தூங்கி எழுந்த உடன் முதல் வேலை பல் துலக்குவது தான். பெட் காபி குடித்துவிட்டு பல் துலக்குவார்கள் சிலர். பலர் தினமும் தான் துலக்குகிறோமே என்று கடமைக்கு செய்வார்கள். எனவே அதிக கவனம் கொண்டு இரு வேளையும் பல் துலக்குவதால் உடலுக்கும் மேன்மை உண்டாகும் பற்களும் பாதுகாக்கப்படும்.