ஆன்மிகம்ஆலோசனை

பிரச்சனைகள் பனி போல் விலக படியுங்க

வாழ்வின் மிகப்பெரிய பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கவும், இறைவனுடைய அருள் கிடைக்கவும், கழுத்தை நெரிக்கும் அளவிற்கு பிரச்சனைகள் இருந்தாலும் மீண்டு வர பதிகங்கள் இங்கு கொடுத்துள்ளோம். அதனை தொடர்ந்து படித்து வரவும். இதன் மூலம் தற்கொலை எண்ணம் ஏற்படாது. தொடர் பிரச்சனைகளால் ஏற்பட்டுள்ள தற்கொலை எண்ணவும் விலகிப் போகும். மலைபோல் இருக்கும் சவால்களும் பனி போல் மிக விரைவில் விலகிப் போகும். அனைவரும் இதனை பின்பற்றி தினசரி படித்த வரவும். சிவபெருமான் வேண்டி விரும்பி வாழ்ந்து வந்த அப்பர்க்கு சோதனை ஏற்பட்ட போதெல்லாம் அவர் பாடிய பாடல் இதுவாகும்

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈச னெந்தை யிணையடி நீழலே.

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்

நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே

நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.

ஆளா காரா ளானாரை யடைந் துய்யார்

மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்

தோளா தசுரை யோதொழும் பர்செவி

வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே.

குறிக ளும்மடை யாளமுங் கோயிலும்

நெறிக ளும்மவர் நின்றதோர் நேர்மையும்

அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்

பொறியீ லீர்மன மென்கொல் புகாததே.

நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்

சுடலை சேர்வது சொற்பிர மாணமே

கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்

உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.

மேலும் படிக்க : ஸ்ரீ காளிகாம்பாள் 108 போற்றிகள் !!!

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்

நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்

ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து

காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.

குறிக ளும்மடை யாளமுங் கோயிலும்

நெறிக ளும்மவர் நின்றதோர் நேர்மையும்

அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்

பொறியீ லீர்மன மென்கொல் புகாததே.

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்

தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்

சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே

வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.

எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்

தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்

டுழுத சால்வழி யேயுழு வான்பொருட்

டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே.

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்

பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு

நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.

விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *