பிரச்சனைகளை தீர்வு காணும் மனப் பக்குவத்தை பெற
மார்கழி மாதத்தில் சூரிய உதயத்திற்கு முன் வாசலில் கோலமிட வேண்டும். இதனால் முழுமையான பிராணவாயுவை பெற முடிகிறது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றன. காலையில் குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும். இது ஒரு யோகாசனம் கூட இடுப்பை வளைத்து கால்களை நேராக்கி தலையை குணிந்து கோலமிடுதல் யோகாசனம். உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கோலம் போட வேண்டும்.
- உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
- முழுமையான பிராணவாயுவை பெற.
- உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள.
சூழ்நிலையை நமக்கு சாதகமாக்க
பூமியினுடைய சக்தி நிலையில் பல மாற்றங்கள் நிகழும் மார்கழி மாதம். சூரியன் தட்சிணாயனத்தில் இருந்து உத்தராயணதிற்கு நகரும். இந்த சக்தி தேவையான அறிவு, ஞானம் ஏற்பட்டு, சூழ்நிலையை நமக்கு சாதகமாக மாற்றிக் கொடுக்கும் வழிமுறை தான் கோலம் போடுவது. பூமத்திய ரேகை பல மாற்றங்கள் நிகழ்வதாக மார்கழி மாதத்தில் கூறப்பட்டுள்ளன. டிசம்பர் மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து, வடக்கிற்கும். ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து, தெற்கிற்கும். சூரியனின் ஓட்டம் இருக்கும்.
வீட்டில் உள்ளவர்களை அசத்த
கோலம் ஒருவகையான யந்திரமாக கருதப்படும். இதனால் தன் வீட்டு வாசலில் கோலம் போடப்படுகின்றன. கோலம் போடுவதற்கு காரணமும் இது தான். கோலங்கள் பல வகையில் இருக்கின்றன. புள்ளிக்கோலம், தந்திரி கோலம், கம்பி கோலம், பாம்பு கோலம், வட்ட கோலம், சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், பிறந்த குழந்தைக்கு வரவேற்கும் தொட்டில் கோலம், விழாக்கால கோலங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
புதுப்புது கோலங்கள்
இப்படி புதுப்புது கோலங்களை போட்டு வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம். வீட்டு வாசலிலும் கோலங்கள் அழகாக காட்சி தரும். மேலும் பூஜை அறையில் அரிசி மாவினால் மண்ணின் மீது வரையும் ஓவியக்கலை கோலம். தென்னிந்தியாவில் வரையப்படும் ஒரு கலை. கோலமும் ஒருவகையான வழிபாடுதான். கோலம் வரைவது ஒழுக்கத்தையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலையும் தந்து நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மனப்பக்குவத்தை கொடுக்கும்.