ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு செய்ய வேண்டியவை
மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்த பெண்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் தண்ணீரிலிருந்து, காய்கறி, பழங்கள் எல்லாவற்றுக்கும் பங்குண்டு. பப்பாளியும், அன்னாசியும் பெண்களின் மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்தும்.
வெள்ளரி விதை, பூசணி விதை பருவமடைந்த பெண்கள் தினம் சிறிது சாப்பிட்டு வர ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு சீராகும். முருங்கைக்கீரை முதுகெலும்பை வலுவாக்கும். தினம் மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை மற்றும் சினைப்பை நோய்கள் அண்டாது.
மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால் டீன் ஏஜில் உண்டாகும் மன உளைச்சலையும் மன முரண்பாடுகளையும் போக்கும் குணம் இதற்கு உண்டு. மன பலம் இல்லாத காரணத்தினால் தான் இந்த வயதில் இனக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு காதல் எனக் குழம்பிப் போய் எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் பலரும்.
மலச்சிக்கலையும், மாதச் சிக்கலையும் தீர்க்கும் சக்தி மாதுளைக்கு உண்டு என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. பருவ வயதுப் பெண்ணின் முதல் டாக்டர் அவர்களது அம்மா. அவர்கள் வீட்டு கிச்சன் கிளினிக். அம்மாவும், மகளும் இதை உணர்ந்து புரிந்து நடந்தால் போதும். ஆரோக்கியமான வாழ்வு வசமாகும்.
பெண் குழந்தையை பெற்ற ஒவ்வொரு அம்மாவும் தன் குழந்தையின் பூப்பெய்தும் பருவம் குறித்த கவலை நிச்சயமாக இருக்கும். வரக் கூடாத வயதில் வந்து விடுகிற மாதவிலக்கும். வர வேண்டிய வயதில் வராத மாதவிலக்கும். இரண்டுமே அம்மாக்களுக்கு கவலையைத் தரும். மகளுக்கு உடல்ரீதியான தொந்தரவையும் தரக்கூடியவை.
குறிப்பாக மழலை மாறாத இளம் வயதில் 10 வயதுகளில் பூப்பெய்தும் பெண் குழந்தைகள் ரொம்பவே பாவம். தம் உடலில் நிகழ்கிற மாற்றத்தைப் புரிந்து கொள்ளக் கூட தெரியாமல் பெண் குழந்தைகள் ஒரு பக்கமும், அவற்றைப் புரிய வைக்க அவர்களது அம்மாக்கள் இன்னொரு பக்கமுமாக அவஸ்தைகள் வீட்டுக்கு வீடு பார்க்க முடிகிறது.
இனிமேல் நீ குழந்தை அல்ல பெண் என்பதை உணர்த்தும் அடையாளமே மாதவிலக்கின் தொடக்கம். தாய்மை என்கிற மிகப்பெரிய பொறுப்புக்கு உடலை ஆயத்தப்படுத்தும் ஆரம்பக் கட்டம் தான் இது.
பூப்பெய்தும் வயதில் இந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் ஊட்டம் தான் அடுத்தடுத்து அவள் கடக்க போகிற பருவங்களுக்கு ஆதாரம். இதை உணர்ந்து அம்மாக்களும், பூப்பெய்தும் பெண் குழந்தைகளும் தன் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.