இந்தியாவுக்கு ஆபத்து..? நாசா விஞ்ஞானிகள் பகீர் எச்சரிக்கை..!
சூரிய வெடிப்பு காரணமாக, ஜனவரி 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சூரிய புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் இந்திய பெருங்கடலை சுற்றியுள்ள பகுதிகளில், தொலைத்தொடர்பு மற்றும் ரோடியோ சிக்னல்கள் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மேலும் அதைத் தொடர்ந்து, வரும் நாட்களில் சிறிய புவி காந்தப் புயல்களால் பூமி தாக்கப்படலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
சூரியனில் இருந்து சக்தி வாய்ந்த வெடிப்புகள், ரேடியோ தகவல் தொடர்பு, மின்சார சக்தி கட்டங்கள் மற்றும் வழிசெலுத்தல் சிக்னல்களை பாதிக்கலாம். என்றும், அவை விண்கலம் மற்றும் விண்வெளி வீரர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 1 சதவீதம் தான் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.