ராகு கிரஹஸ்தய சூரிய கிரகணம்..!!
ஆனி மாதம் 7ஆம் நாள் 21 6 2020 ஞாயிற்றுக்கிழமை அமாவாசை திதி மிருகசீரிஷ நட்சத்திரம் 4ம் பாதம் மிதுன ராசியில் கன்னியா லக்னத்தில் ராகு கிரஹஸ்தய சூரிய கிரகணம் நிகழவிருக்கிறது. சூரிய கிரகணம் 10:22 மணிக்குத் துவங்கி மதியம் 1.42 மணிக்கு முடிவடைகிறது. சூரிய கிரகணம் ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் ஞாயிற்றுக்கிழமைகளில் பிறந்தவர்கள் சாந்தி செய்ய வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு மேல் குளித்து விட்டு வீட்டை சுத்தம் செய்து, போஜனம், சிரார்த்தம், தர்ப்பணம் செய்தல் மற்றும் கர்ப்பஸ்திரீகள் சூரிய நமஸ்காரம் செய்தல் அவசியம். ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோதுமை, உளுந்து வைத்து சாந்தி செய்து கொள்ளலாம். இந்த நட்சத்திரங்கள் தோஷ நட்சத்திரங்கள் ஆகும்.
கிரகண தோஷம் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கிரகணத்திற்கு முன்பாக தர்ப்பைப் புல் வீட்டிலுள்ள எல்லா அறைகளிலும், சமையல்கட்டு, பூஜை ரூம், பெட்ரூம் போன்ற இடங்களில் வைத்து விடலாம். தர்ப்பைப் புல் கிரகண தோஷத்தின் பாதிப்பை ஒளிக் கதிரை அண்ட விடாமல் தடுக்கும். உணவு பொருட்களில் பால், தயிர், எண்ணெய், பருப்பு, அரிசி போன்றவற்றிலும் சிறிது தர்ப்பைப் புல்லை போட்டு வைக்கவும்.
கிரகணம் முடிந்ததும் வீட்டை சுத்தம் செய்து, குளிக்கும் நீரில் சிறிது உப்பு கலந்து தலைக்கு குளித்து விட்டு, வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்து பூஜை செய்ய வேண்டும். இதனால் தோஷங்கள் விலகும். இது பொதுவான அனைவரும் செய்ய வேண்டிய கட்டாய பரிகாரம் ஆகும்.
கிரகண நேரத்தில் முன்பாகவே குளித்து விட்டு கிரகணம் முடியும் வரை உங்களுக்குப் பிடித்த இஷ்ட தெய்வங்களின் தோத்திரங்களை பாராயணம் செய்யலாம். இதனால் வீட்டில் இருந்து பாராயணம் செய்வதால் அந்த மந்திரத்தின் சக்தி உங்கள் வீட்டு பூஜை அறையில் உள்ள தெய்வ படங்களுக்கு கிடைக்கும்.
வீட்டில் தினமும் செய்யும் பூஜையை விட இந்த நேரத்தில் படிக்கும் மந்திரங்களின் பலன் மூன்று மடங்காகப் பெருகும். இந்த நேரங்களில் உங்களுக்கு என்ன தேவையோ அதை நினைத்து இந்த மந்திரங்களை பாராயணம் செய்யலாம். விநாயகர், முருகன், பெருமாள், அம்மன், துர்க்கை எந்த தெய்வத்தின் மந்திரங்களை பாராயணம் செய்கிறீர்களோ அதன் பலன் அதிகரிக்கும்.
கிரகண நேரங்களில் உணவு உண்பது கூடாது. இதனால் உடலில் உணவுக் தங்கியிருப்பதால் உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். கிரகணத்திற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே உணவு உண்டு விட வேண்டும். இடையில் பசித்தால் நீர் ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். திட உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
எளிதில் ஜீரணிக்கக்காமல் போய் விடும். இது அனைவருக்கும் பொதுவான ஒன்று. எனவே இதை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும். கிரகணம் முடிந்து குளித்து பூஜை முடித்து விட்டு தான் அனைவரும் உணவு உண்ண வேண்டும். இது அனைவருக்கும் கிரகணத்தின் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.