மெதுவடை சாப்ட்டா செய்யணுமா?
ஒவ்வொரு முறையும் உளுந்த வடை செய்யும் போது பெண்கள் ஏதாவது சிறு தவறு செய்வது வழக்கம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதத்தில் சொதப்பி விடும். உளுந்து வடை செய்யும் போது ரொம்ப நேரம் உளுந்தை ஊற வைக்கக் கூடாது.
- அதிக பட்சம் முக்கால் மணி நேரத்திற்குள் உளுந்தை அரைத்து விட வேண்டும்.
- அரைத்த மாவு பார்க்கும் போது சாஃப்டாக இருக்கும்.
- உளுந்தை அரைத்து உடனடியாக வடை சுட வேண்டும்.
அதிக பட்சம் முக்கால் மணி நேரத்திற்குள் உளுந்தை அரைத்து விட வேண்டும். மாவு அரைத்து சிறிய உருண்டை எடுத்து தண்ணீரில் போட்டால் மிதக்க வேண்டும். பார்க்கும் போது மாவு சாஃப்டாக இருக்கும். அதே போல உளுந்தை அரைத்து உடனடியாக வடை சுட வேண்டும். ரொம்ப நேரம் வைக்கக் கூடாது. வாங்க உளுந்து வடை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
உளுந்த வடை
தேவையான பொருட்கள்
உளுந்தம் பருப்பு 200 கிராம், கடலைப் பருப்பு 25 கிராம், பச்சை மிளகாய் 5, இஞ்சி சிறிய துண்டு, உப்பு தேவைக்கு ஏற்ப. எண்ணெய், வெங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை தேவைக்கு ஏற்ப.
செய்முறை விளக்கம்
பருப்பை நன்றாகக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை எடுத்து விட்டு நைசாக கிரைண்டரில் அரைக்கவும். அதிகம் தண்ணீர் ஊற்றக் கூடாது. தண்ணீர் தெளித்து மட்டுமே அரைத்து கெட்டியாக இருக்க வேண்டும். மாவு அரைக்கும் போது சிறிது உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து பிசைய வேண்டும். தேவைப்பட்டால் சிறிது பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய விடவும். ஒரு வாழை இலையில் அல்லது பிளாஸ்டிக் கவரில் சிறிது தண்ணீர் தடவி அதில் எலுமிச்சை அளவு மாவை உருட்டி வைத்து வடையாக தட்டி வைக்கவும். தட்டி வைத்த வடையை எண்ணெய் காய்ந்ததும் போட்டு பொரித்து எடுக்கவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறியதும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான மெதுவடை தயார்.