சினேகா பிரசன்னா வீட்டு வரலஷ்மி பூஜை
வரலட்சுமி வீட்டுக்கு வந்தாங்களா!

ஆடி பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வரும் வரலட்சுமி விரதத்தை சகல சௌபாக்கியங்களும் கிடைக்க பெண்மணிகள் மனதார பூஜை செய்கின்றனர். விரத பூஜை செய்ய முடியாதவர்களும் பழக்கம் இல்லாதவர்கள் கண்டுகளிக்க முன்னணி நடிகை வீட்டு பூஜை இதோ பார்த்து ஆசி பெருங்கள்.
வரலக்ஷ்மி பூஜையில் பிரதானமான இருக்கும் அம்மனின் முகம் கலசம் தேங்காய் மாவிலை தவிர்த்து புடவை கட்டி அலங்காரம் செய்வது ஒரு கலை. சினேகா வீட்டில் அந்தக் கலையை கலைநயத்துடன் செய்துள்ளனர். ஸ்ரீ மகாலட்சுமி வரம் அளிப்பதால் வரலட்சுமியாக பூஜிக்கிறோம். சினேகா வீட்டில் அந்த வரமகாலட்சுமியை மும்மூர்த்திகளாக அலங்கரித்து வைத்துள்ளனர்.

சினேகா 90ஸ் கிட்ஸின் கனவு கதாநாயகி. எந்த உடையாக இருந்தாலும் பக்காவாக பொருந்தும் கதாநாயகிகளுள் சினேகா முன்னணியாக விளங்குபவர். சினேகா மற்ற உடைகளை விட புடவையில் லட்சணமாக இருப்பார்கள். பூஜை நேரத்தில் அணியப்படும் ஆடைகளில் லட்சணத்துடன் தெய்வீகமும் கலந்திருக்கிறது.

அம்மனுக்கு உகந்த நிறமாகவும் பூஜை புனஸ்காரங்களுக்கு உகந்ததாகவும் சொல்லப்படும் மஞ்சள் நிறத்தில் நீலவண்ண பார்டருடன் பட்டுப்புடவையில் பூஜைக்காக தயாராக இருக்கும் சினேகா அந்தப் புடவைக்காக நன்றி தெரிவித்து அனைவருக்காகவும் பூஜையில் பிரார்த்தித்து இருப்பதாகவும்; பண்டிகை பூஜை என்றால் ஒரு சந்தோஷமும் நல்ல அமைதியான சூழலும் கிடைக்கிறது. இறைவனிடம் சரணாகதி அடைவது நமக்கு வலிமை நம்பிக்கை மற்றும் நம் பழக்க வழக்கத்தை பின்பற்றுதல் என அனைத்தும் அருளப்படும் என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பேஜ்ஜில் கூறுகிறார் சினேகா பிரசன்னா.