இன்ஸ்டாவில் காலை உணவாக பகிர்ந்த சீமத்து ராணி
தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது சமந்தாவின் காலைப்பொழுது உணவை உட்கொள்வது பற்றி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாக சைதன்யாவின் மனைவியுமான, பிரபல நடிகையான சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊரடங்கு காலத்தில் தான் செய்யும் நடவடிக்கைகள் குறித்து பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக ஊரடங்கு நேரத்தில் இவர் வீட்டில் வடிவமைத்திருக்கும் தோட்டம் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளன. இந்நிலையில் இவர் தற்போது காலை பொழுதை மிக இதமாக கழிப்பதற்கு எப்படிப்பட்ட உணவை எடுத்துக்கொள்கிறேன் என்பதைப் பற்றி செய்முறையுடன் விளக்குகிறார்.
காலை உணவாக இதை தயாரித்து சாப்பிடுகிறேன் என்று பகிர்ந்தார். காலைப் பொழுதை இதமாக்க சமந்தா என்ன உணவை உட்கொள்கிறார் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிவரிக்கீரை, பசலி, இளநீர், வாழைப்பழம், சியா விதை, ஆளி விதை, ஒமேகா கலவை மாவு, ஊட்டச்சத்து மிகுந்த விதைகள் அடங்கிய மாவு.
ஆளி விதை, சியா விதை மற்றும் ஒமேகா கலவையை 10 நிமிடம் இளநீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். இவற்றை ஊற வைக்கும் நேரத்தில் இலைக்கோசு கீரை, சிவரிக்கீரை, பசலி போன்ற கீரை வகைகளை நன்றாக 15 நிமிடம் நீரில் கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதனுடன் அனைத்தையும் ஒன்றாக கலந்து வாழைப்பழம் வேண்டுமானால் எடுத்து, சத்து மாவையும் சேர்த்துக் கொள்ளலாம். ஊட்டச்சத்து மிகுந்த ஆளி விதைகள் ஆண்டி ஆக்சிடென்டாக செயல்படும்.
ஓமேகா நார்ச்சத்து மற்றும் புரதம் மிகுந்த சியா விதை உள்ளிட்டவை நற்பலனை அளிக்கக்கூடியது என்று தெரிவித்திருந்தார். இப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.