அதிக வரவேற்பை பெறப்போகும் ஸ்மார்ட் கண்ணாடி
ஸ்மார்ட் கிளாஸ் கண்ணாடி ரகங்கள் பல உள்ளன. பார்வைக்கு இந்த வகை கண்ணாடிகள் சாதாரண மூக்கு கண்ணாடிகள் ஆக இருக்கும். கணினியில் வேலை பார்ப்பவர்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும், டிராவல் செய்பவர்களும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை என கண் பிரச்சனைகளுக்கு ஏற்ப மூக்கு கண்ணாடி அணிந்து கொள்வார்கள்.
அதிலும் தன் முகத்திற்கு ஏற்றவாறு ஸ்டைலாக, லுக்காக நிறைய மூக்குக்கண்ணாடிகளும் வந்து விட்டன என்பதால் பார்த்துப் பார்த்து வாங்கி அணிந்து கொள்கிறோம். கண்களைப் பாதுகாக்க பலவகை கண்ணாடிகளும் உள்ளன. இந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் மூக்குக் கண்ணாடியை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது.
மியூசிக் கேட்பது, போன் பேசுவது போன்ற ஸ்பெஷலிடீஸ் இந்த கண்ணாடியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட் கண்ணாடியின் ஓரத்தில் குறைந்த ஒலி அளவு கொண்ட ஸ்பீக்கர்கள் இருக்கின்றனவாம். இவற்றின் மூலமாக பாடல்களை கேட்க முடியும். செல்போன் அழைப்புகளையும் கண்ணாடி மூலமாக பேசிக்கொள்ளும் வசதியை அமைத்துள்ளனர்.
ஸ்மார்ட் கிளாஸ் என்றாலும் இந்த வகை கண்ணாடிகள் பார்வைக்கு சாதாரண மூக்கு கண்ணாடிகள் ஆகவே தெரியுமாம். இதனை எப்போதும் போல பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றனர்.
இந்த கண்ணாடியை எங்கேனும் மறந்து வைத்து விட்டாலும் ஒரு கிளிக் மூலம் கண்டுபிடித்து கொள்ள முடியும் என்று இந்த கண்ணாடியை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளன. இந்த ஸ்மார்ட் மூக்குக்கண்ணாடி நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.