தூக்கம் ஒரு வரப்பிரசாதம்..!!
நம் வாழ்வில் முக்கிய அங்கமாக இருப்பது நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என்றால் அது தூக்கம் ஆகத்தான் இருக்கும். தினமும் இரவில் ஒரு டம்ளர் பால் அருந்தி விட்டு தூங்குங்கள். ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் கிடைக்கும். தூக்கம் ஒரு வரப்பிரசாதம். அதை நாமே கெடுத்துக் கொள்ளக் கூடாது.
சரியான நேரத்தில் உறங்கி காலை அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும், என்பதை கடைப்பிடியுங்கள். மற்றவர்களுடன் தன்னைத் தானே ஒப்பிட்டுப் பார்த்து பயப்பட கூடாது. இது தான் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் என்ற மன உணர்வு.
ஆசிரியர், பெற்றோர்களின் எதிர்பார்ப்பு என கலவையான மன நிலையில் மாணவர்கள் இருப்பார்கள். இதுதான் தேர்வு குறித்த பதட்டத்தை ஏற்படுத்துகிறது. முதல் மதிப்பெண் பெரும் மாணவர் வரை இந்த மனநிலையை மாற்ற முடியாது. நல்ல மதிப்பெண் பெறுவேன் என்று மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.
இந்த நேர்மறை சிந்தனை பதட்டத்தை குறைக்க உதவும். தினமும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சரியான நேரம் பகலில் தூங்கும் 40 நிமிடங்களுக்கு மேல் போக கூடாது. மேலும் இரவு படுக்கும் போது எப்போதும் வயிறு அரை வயிறு உணவுடன் வைத்திருப்பது நல்லது. முழு வயிறு சாப்பாடும், காலியான வயிறு வைப்பது தவறு.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தை தொலைப்பவர்கள் உடல் நலனை தொலைத்து விடுகிறார்கள். ஆழ்ந்த உறக்கத்திற்கு மிக மிக நெருங்கிய தொடர்பு உண்டு. என்பதை அனைவரும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் பலர் தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.
காரணம் தேர்வில் சாதிக்க வேண்டும் என்ற படபடப்பு தூக்கம் குறைய, குறைய படிப்படியாக உடம்பில் உள்ள செல்கள் அனைத்தும் பழுதடைய ஆரம்பிக்கிறது. முக்கியமாக செல்களிலிருந்து டாக்சின் அதிகமாக உருவாக்குவதால் அது வெளியேற முடியாமல் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
தூங்க ஆரம்பிக்கும் நேரம் ரொம்ப முக்கியம் ஆகும். நல்ல செயல்களை செய்வது, திறமையோடு செயல்படுவது, தெளிவாக செயல்படுவது, இந்த மூன்றும் ஒருவருக்கு இருக்க வேண்டும். எனில், அவர்கள் தினமும் ஆழ்ந்து நிம்மதியாக தூங்க வேண்டியது மிக அவசியம். போதிய ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் போனால், ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை மட்டுமில்லாமல், உடல் பருமன் இல்லற வாழ்க்கையிலும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நேற்று நன்றாக தூங்கியிருந்தாள் தான் இன்று வேலை சரியாக நடக்கும். நாம் அனைவருமே நம் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்குகிறோம். நூறு ஆண்டு வாழ்ந்தால் அது கால் பகுதி ஆண்டுகள் தூக்கத்திலேயே போய் விடுகிறது. சாப்பாடு நம் உடம்புக்கு எவ்வளவு அவசியம், அதே போல் தூக்கமும் அவசியம்.
ஆனால் மாறி வரும் உலகில் வேலைப் பளு தேவையில்லாத சிந்தனைகள், மன உளைச்சல் போன்ற காரணத்தினால் தூக்கம் பலருக்கு போதிய அளவு இல்லாமல் போய்விடுகிறது. தூக்கம் தொலைந்த அந்த நாள் உற்சாகமாக இருக்காது. என்பது கண்டறியப்பட்ட உண்மை. உடலுக்கு இது ஒருவிதமான ஓய்வு அனுபவித்து தூங்குபவர்கள் உலகின் மிகச் சிலரே.
மனிதனின் மனதை கட்டுப்படுத்த, கெட்ட எண்ணங்களை செயல்படுத்த, கோபத்தை குறைக்க இயற்கையாக படைக்கப்பட்ட ஒரு செயல் தான் தூக்கம். அவ்வளவு பெரிய சக்தி தூக்கத்தில் உண்டு. என்பதை அனைவரும் உணர வேண்டும். சரியான உணவும், ஆழ்ந்த தூக்கமும், மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.
தூக்கம் அது ஒரு சுகம் அனுபவித்து தூங்குவதில் ஒரு அலாதி இன்பம் இருக்கும். எல்லோருக்கும் இந்த தூக்கம் கிடைத்து விடாது. ஆழ்ந்த தூக்கம் என்பது, உயிர் மூச்சு உடலோடு இணைத்து ஒருங்கிணைந்து ஒரே சீரான அளவில் தன்னை மறப்பது தான் தூக்கம்.