அழகு குறிப்புகள்

அழகாக மாறுவது எப்படி – மேனி பொலிவு பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்.

அழகாக  மாறுவது எப்படி – மேனி பொலிவு  பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்.  

பல ஆண்டுகளாக, மங்கலான சருமத்தை விட பொலிவான தோல் சிறந்தது என்று நம்புவதற்கு நாம் பழகிவிட்டோம். பல ஆண்டுகளாக ஊடகங்களில் உள்ள அனைத்து தகவல்களும் உங்கள் தோல் தொனியை இருட்டிலிருந்து பொலிவாக மாற்றுவது சாத்தியம் என்பதை  உணர்த்தியுள்ளது!.   இந்த தகவல் தவறாக வழிநடத்துவது மட்டுமல்ல, மருத்துவ ரீதியாகவும் தவறானது என்பது உங்களுக்குத் தெரியுமா!    உங்கள் உடல் அமைப்பிற்கு உரிய தோல் தொனியை மாற்றுவது சாத்தியமில்லை.   ஆனாலும், பழுப்பு, கருமையான புள்ளிகள் மற்றும் முகப்பருவுக்குப் பிந்தைய நிறமி போன்ற  சரும குறைபாடுகளை பாதுகாப்பான மற்றும் நவீன தோல் மருத்துவ சிகிச்சை மூலம் நீக்க முடியும்.     இந்த மேம்பட்ட அழகியல் சிகிச்சைகள் உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் மற்றும் அதன் இயற்கையான பளபளப்பை மீட்டெடுக்கலாம்.   மேலும் அத்தகைய வழிமுறைகள் , அழகியல் சார்ந்த தீர்வுகள் மற்றும் சருமம் பற்றிய கட்டுக்கதைகளை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையைப் படியுங்கள்!

 எது நமது தோலின் நிறத்தை  தீர்மானிக்கிறது? 

மனித தோலின் வண்ணம்  கருமை முதல் வெளிர் பழுப்பு வரை பல்வேறு வகைப்படும்.   நமது தோல் நிறம் நமது மரபணு கட்டமைப்பு மற்றும் சூரிய ஒளியின் விளைவே ஆகும்.

கருமையான சருமம் எப்போதாவது  வெண்மையாக மாறுமா ?   

தோல் தொனியில் கடுமையான மாற்றத்தையும்  மருத்துவ ரீதியாக அடைய முடியாது என்பதே சரும மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களின் உறுதியான கருத்து.   அத்தகைய மேனி நிற மாற்றத்தை உறுதி அளிக்கும் சிகிச்சைகளையும் அவர்கள் தீவிரமாக எதிர்க்கின்றனர்.   பலருக்கு  சருமம் , தோல் தொனி மற்றும் அமைப்பை சில காரணிகள் பாதிக்கின்றன , மேலும் ஒரு அனுபவமிக்க தோல் மருத்துவர் இந்த சிக்கல்களுக்கு சிகிச்சையளிக்கும்போது, ​​தோல் ஒட்டுமொத்தமாக மேம்பட்ட தோற்றத்தையும் சமமான தொனியையும் அளித்து புத்துணர்ச்சியடைகிறது.   ஆனால் ஒட்டுமொத்தமாக சரும நிறத்தை மாற்றுவது சாத்தியமே அற்றது.

 “அழகாக மாற முயற்சிப்பது” ஏன் மிகவும் சர்ச்சைக்குரியது? 

மேனி பொலிவைப் பெற வைக்கும் கிரீம்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் மத்தியிலும் மிக பிரபலமாக உள்ளன.    இருண்ட நிறமுள்ள மக்கள் தங்கள் தோல் தொனியை ஒளிரும் சிவப்பழகு மேனியாக  கிட்டத்தட்ட மாயமாக மாற்ற முடியும் என்று நம்புவதற்கு பரவலான விளம்பரம் நம்மை தவறாக வழிநடத்தியுள்ளது.    இந்த தயாரிப்புகளின் சந்தையில அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால், அவற்றை எதிர்த்து அணை கட்டுவதும் அவ்வளவு சுலபமில்லை!  

எச்சரிக்கை குறிப்புகள்:   சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான கிரீம்களில் ஸ்டெராய்டுகள், ஹைட்ரோகுவினோன், பாதரசம் மற்றும் ட்ரெடினோயின் போன்ற பொருட்கள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.   தோல் மருத்துவரின் கடுமையான மேற்பார்வையின் கீழ் நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தோல் கிரீம்களைப் பயன்படுத்த வேண்டும் உரிய மருத்துவர் வழிகாட்டுதல் இல்லாமல் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.    இந்த தயாரிப்புகளை உரிய மருத்துவ மேற்பார்வை இல்லாமல் நீண்ட நாட்கள் பயன்படுத்துவதால் நிரந்தர டிஸ்பிக்மென்டேஷன், தோல் மெலிந்து, சுருக்கம், அசாதாரண உணர்திறன், தடிப்புகள், நமைச்சல் மற்றும் எரியும் உணர்வு போன்ற பாதகமான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.   இவை தவிர, இவற்றின் நீடித்த பயன்பாடு இரத்த ஓட்டத்தில் தீங்கு விளைவிக்கவும் , ரத்த மூலப் பொருள்களை உறிஞ்சுவதன் விளைவாக கடுமையான உடல்நலக் கவலைகளை ஏற்படுத்தக்கூடும்.    இத்தகைய மேனி பொலிவுறவைப்பதாக கூறிக்கொள்ளும் தயாரிப்புகள் சருமத்தின் ஒட்டுமொத்த தரத்தை புறக்கணிக்கின்றன இவை மெலனின் கட்டமைப்பின் அடிப்படை காரணத்தை நிவர்த்தி செய்ய முடியாது !     ஒரே இரவில் இத்தகைய சரும கிரீம்கள் ஒரு பிரளயம் போல தவறான எண்ணங்களையும் , கருத்துக்களையும் பரப்பிவைத்துள்ளது.    எண்ணற்ற கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் இத்தகைய தயாரிப்புகள் அல்லது பொருட்களைப் பற்றி பேசுகின்றன, அவை ஒளிரும் சருமத்தை நிரந்தரமாகவும் உடனடியாகவும் தருவதாக பொய்யாக உறுதியளிக்கின்றன, இந்த கூற்றுக்களை உறுதிப்படுத்த எந்த அறிவியல் ஆய்வுகளும் ,  மருத்துவ ஆராய்ச்சி மற்றும் ஆதாரங்கள் எதுவும் இல்லை.  

சா.ரா 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *