சின்னத்திரையூடியூபெர்ஸ்

Sirakadikka aasai update : பாட்ஷா பட ரஜினி போல் நண்பர்களுக்காக ஆட்டோ ஓட்டும் முத்து

விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி யில் முதலிடத்தை தக்க வைத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சீரியல் ஆக தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் வலம் வருகிறது. மீனாவின் குடும்பத்திற்காக முத்து தன் மேல் அனைத்து பணிகளையும் போட்டுக்கொண்டு தற்போது அனைவரிடத்திலும் ஒரு குற்றவாளியாக நிற்கிறார்.

ஆட்டோ ஓட்டும் முத்து

முத்து தனது நண்பர்களின் கடனை அடைப்பதற்காக தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நினைத்து தனது காரை விற்று அவர்களின் கடனை அடைத்து சீட்டியிடம் இருந்து தனது நண்பர்களை காப்பாற்றி விட்டார் ஆனால் அதன் பிறகு முத்து தற்பொழுது என்ன செய்யப் போகிறார் வேறு எங்காவது வேலைக்கு போவார் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென ஆட்டோவுடன் வந்து மாஸ் என்ட்ரி கொடுத்து தனது நண்பர்கள் முன் நிற்கிறார்.

இனிமேல் நான் ஆட்டோ தான் ஓட்ட போகிறேன் என்று சொன்னதும் தனது நண்பர்கள் முகத்தில் சந்தோஷமே இல்லாமல் எங்களால் தான் நீ இந்த நிலைமைக்கு வந்து விட்டாய் என்று வருத்தப்படுகின்றனர். படையப்பா படத்தில் வரும் ரஜினி போல் நண்பர்களுக்காக காரை விட்டு கடனை அடைத்த முத்து தற்பொழுது பாட்ஷா பட ரஜினி போல் ஆட்டோ ஓட்டுநராக மாறிவிட்டார்.

மீனாவிற்காக உண்மையை மறைத்த முத்து

மீனாவின் தம்பி சத்யா தான் விஜயாவின் பணத்தை திருடினான் என்ற உண்மை குடும்பத்தில் தெரிந்தால் மீனாவின் குடும்பம் நொறுங்கி விடுவார்கள் விஜயா காலத்திற்கும் குத்தி காட்டி பேசுவார் என்ற காரணத்திற்காக முத்து அனைத்து உண்மைகளையும் தனக்குள் போட்டு மறைத்து வைத்துக் கொண்டு மீனாவிற்காக உண்மையை மறைத்து அனைவரும் முன்பும் குற்றவாளியாக நிற்கிறார். இந்த காரணத்தினால் மீனாவும் சரியாக முத்துவிடம் பேசுவதில்லை.

அருணாச்சலம் எவ்வளவு தூரம் கேட்டும் முத்து உண்மையை சொல்லவே இல்லை குடும்பத்திற்காக தன்னை காயப்படுத்திக் கொண்டு நண்பர்களுக்காக தன் தொழிலை விட்டு உயர்ந்த மனிதராக முத்து அனைவரும் மனதிலும் நிற்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *