Sirakadikka Aasai : ரோகினிக்கு தாலி வாங்கி கொடுத்த மனோஜ் ; முத்து மீனாவை அசிங்கப்படுத்தும் விஜயா
தாலி வாங்கி கொடுத்து ரோகிணிக்கு ஐஸ் வைக்கும் மனோஜ். ஆனந்த தாண்டவம் ஆடும் விஜயாவால் அவமானப்படும் முத்து மீனா.
யார் சிறந்த ஜோடி ?
போட்டி வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து இரவு ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் சண்டை போடுகின்றனர் என்னை கேட்காமல் எதற்காக குழந்தை பெத்துக்கணும்னு சொன்னேன் என்று சொல்லி ஸ்ருதி கேட்க எனக்கு குழந்தையை வேண்டாம் என்று ரவி சொன்ன சண்டைபெரிதாகிறது.

முதலில் குழந்தை வேண்டாம் என்று சொன்ன ஸ்ருதி ரவி இப்படி சொன்னதும் நீ எப்படி முடிவு பண்ணலாம் எனக்கு இப்ப குழந்தை வேணும் என்று சொல்ல மறந்து போன ரவி அப்படியே அமைதியாக தூங்கி விடுகிறார்.
வீடு கட்டப்போகும் முத்து மீனா
இரவு முழுவதும் முத்துவும் , மீனாவும் ஒரு லட்சம் ஒரே நாளில் சம்பாதித்த சந்தோஷத்தில் ஆனந்தமாக பேசி சிரிக்கின்றனர்.

அந்தப் பணத்தை வைத்து ரூம் கட்ட ஆரம்பிக்கலாம் என்று நினைத்து மேஸ்திரியை கூப்பிட்டு கேட்க அவரும் முழு பணத்தையும் ரெடி பண்ணிட்டு அப்புறம் வீடு கட்டலாம் என்று சொல்லிவிடுகிறார்கள். ஆசையாக வீட்டு வேலையை ஆரம்பிக்கலாம் என்று நினைத்த முத்துவிற்கும் மீனாவிற்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் இதைப் பார்த்த விஜயாவுக்கு சந்தோஷம் தாங்க முடியாமல் குதிக்கிறார்.

பொண்டாட்டிக்கு தாலி வாங்கி கொடுக்கும் மனோஜ்
அதிசயத்திலும் அதிசயமாக மனோஜ் என்ற ஒரு நல்ல காரியம் செய்துள்ளார் ஆனால் அதில் எவ்வளவு வில்லங்கம் இருக்கப்போகிறது என்று தெரியவில்லை மனோஜ் ரோகினிக்கு தாலி வாங்கி வந்து அனைவரும் இருக்கும்போது கொடுக்க ரோகினிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

அதைவிட அவரின் மாமியாரான விஜயாவிற்கு கால் தரவில்லை நிற்கவில்லை அவ்வளவு சந்தோஷமாக உள்ளது. ஆனந்தத்தில் வழக்கம்போல் முத்துவையும் மீனாவையும் மட்டும் தட்டி பேசுகிறார் விஜயா.