சினிமாசின்னத்திரையூடியூபெர்ஸ்

Vijay serial update : மீனாவிற்கு திருடி பட்டம் கட்டிய ஸ்ருதியின் பெற்றோர்கள்

சிறகடிக்க ஆசை குடும்பத்தில் மீனாவின் மேல் அநியாயமாக திருடி பட்டம் சுமத்தி பழிபோடும் ஸ்ருதியின் பெற்றோர்கள்.

விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் இப்போது முதலிடத்தில் இருந்து வரும் சிறகடிக்க ஆசை. சீரியலில் முத்துவை வைத்து எப்படியாவது பிரச்சனை செய்ய வேண்டும் என்று ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி முத்துவை குறி வைத்து தாக்கினர். ஆனால் அவர்கள் யாரிடமும் சிக்காமல் தனது அப்பாவின் வார்த்தைக்காக முத்து என்ன பிரச்சனை நடந்தாலும் அமைதியாக வெற்றி கொடுத்து செல்கிறார்.

இப்படியே இருக்க என்னதான் செய்யணும் என்று மாறி மாறி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் வலையில் நம்ம மீனா மாட்டிக்கொள்கிறார்.

ஸ்ருதி கழற்றி வைத்த துளசி மாலையில் அவரின் தங்க செயின் தெரியாமல் மாட்டிக் கொண்டிருந்தது. இதை பார்த்த மீனா ஸ்ருதியிடம் கொடுக்க செயினை எடுத்த பொழுது சரியாக ஸ்ருதியின் பெற்றோர்கள் பார்த்து மீனா திருடிவிட்டார் என அபாண்டமாக அனைவரும் முன்பும் பழைய போட ஆரம்பித்து விட்டனர். அண்ணாமலை என் மருமகள் அப்படிப்பட்டவன் இல்லை என்று எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவே இல்லை. மீனா அழுது கொண்டே முத்துவிடம் நடந்த விஷயம் ஒவ்வொன்றையும் சொல்ல முத்து கோபப்பட்டு ஸ்ருதியின் அப்பாவை அடித்து விடுகிறார்.

இங்கு நடந்த பிரச்சனை எதுவுமே தெரியாமல் வெளியே சென்று விட்டு வரும் ரவியும் ஸ்ருதியும் இதை பார்த்து என்ன செய்யப் போகிறார்கள் மேலும் சுருதி இனி மேல் எடுக்கப் போகும் முடிவு என்ன என்பதை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *