சினிமாசின்னத்திரை

சிறகடிக்க ஆசை- மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ரோஹிணி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மிக விருவிருப்பாக நடந்தது, நேற்று முத்துவும் மீனாவும் ரோமன்ஸ் செய்து கொண்டிருத்ததும் அண்ணாமலை வந்ததும், மீனா சிரித்து கொண்டிருந்த சிரிப்பை கூட நிறுத்தி விட்டாள், இந்த சம்பவம் அண்ணாமலை மனதில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது இதனால் இதனால் அண்ணாமலை குடும்பத்தையே உட்கார வைத்து ஒரு பெரிய முடிவை செய்கிறார், அவர் சொன்ன ஒரு முடிவால் விஜயா முத்துவையும் மீனாவையும் வீட்டை விடே துரத்த முடிவு செய்கிறாள் என்ன நடந்தது என விரிவாக பார்க்கலாம்

ரோகினியின் அடுத்த டார்கெட்

கிருஷிக்கு கடந்த இரண்டு நாட்களாகவே 102 டிகிரி காய்ச்சல் இருக்கிறது, மருந்து கொடுத்தும் சரி ஆகவில்லை, க்ரிஷோ முத்து மீனா உள்ள ஏக்கத்தால் தூக்கத்தில் முத்து பெயரையும் மீனா பெயரையும் சொல்லிக்கொண்டே இருக்கிறான், இதை பார்த்த லட்சுமி, ரோகினியிடம் முத்து மீனாவிடம் எடுத்து கூறி க்ரிஷை பார்க்க வர சொல்லி கூறிக்கொண்டே இருக்க, ரோகினியோ அவர்கள் தயவு எனக்கு தேவை இல்லை என வீரப்பாக கூறினாள், ஆனால் மனதில் என்ன திட்டம் போட்டு வைத்திருக்கிறாளோ, மீண்டும் ரோஹிணி மீனாவையும் ஸ்ருதியையும் சந்தித்து கிரிஷின் நிலையை கூறி எனக்காக வேண்டாம் என் மகன் உங்க மேல ரொம்ப பாசமா இருக்கான், அவனை காப்பாத்த நீங்க வரணும்னு கெஞ்சி கேட்டு கொண்டு இருக்கிறார்

அண்ணாமலையின் அதிரடி முடிவு

மீனாவும் முத்துவும் மாடியில் வீடு கட்டுவதாக கூறி வருடங்கள் கடந்தன ஆனால் இந்த குடும்பத்திற்காக பாடு பட்டு பாடு பட்டு இப்போது வரைக்கும் கட்ட முடியவில்லை, அதை எல்லாம் யோசித்து, அண்ணாமலை வீட்டில் இருக்கும் அனைவரையும் அழைத்து மனோஜ் இருக்கும் ரூமை முத்துவுக்கும் மீனாவுக்கும் தந்து விட்டு மனோஜை ஹாலில் வந்து தங்க சொல்கிறார்

Source Credit – Vijay TV Instagram

விஜயாவின் கோபம்

இந்த வார்த்தையை கேட்டதும் மனோஜிற்கும், விஜயாவிற்கும் தலையில் இடி விழுந்தது போல் ஆகிவிட்டது, மனோஜ் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கிறான், அவனுக்கு பெரிய இடத்தில் பொண்ணு பார்த்து கல்யாணம் செய்து வைக்க போகிறேன், அவனை எதற்கு ஹாலில் படுக்க சொல்றீங்க, முத்துவுக்கு அவனோட தலைவிதி அதனால இருக்காங்க என்னோட பையன அப்டி விட நா விடவே மாட்டேன் என கோபத்துடன் பேசி கொண்டு இருக்கிறாள், இந்த வார்த்தை முத்துவை எவ்வளவு காய படுத்தும் என துளி அளவும் தோணவில்லை ஆனால் ஒரே முடிவாக அண்ணாமலை மனோஜை ஹாலில் தங்க சொல்லி விட்டார்

சிந்தாமணியின் மாஸ்டர் பிளான்

இதை விஜயா சிந்தாமணியிடம் கூறி மனோஜிற்கு பணக்கார பொண்ணு பார்க்க சொல்லி கூறி கொண்டிருக்க, பதிலுக்கு முத்து ஒரு சாதாரண கார் டிரைவர் உங்கள் மருமக வீடு வீட பூ போட்டு கொண்டிருக்க, இவங்க உங்க வீட்டுல இருக்க வரைக்கும் மனோஜிற்கு பொண்ணு கிடைக்காது ரெண்டு பேரையும் எப்படியாது வீட்டை விட்டு துரத்துங்க நா நல்ல பணக்கார பொண்ண பாக்கறேன் என சொல்லி கொண்டே மனதிற்குள் கூடிய சீக்கரம் உன்ன நடுத்தெருவில் நிக்க வைக்கிறேன் என நினைத்து கொள்கிறாள், இதுதெரியாமல் முத்து மீனாவையும் வீட்டை விட்டு துரத்த மாஸ்டர் பிளான் போடுகிறாள் விஜயா இனி அடுத்து என்ன நடக்கும் என பொறுத்திருந்து பாக்கலாம்

sirakadikk aasai today episode - chinthamani master plan

👉 சிறகடிக்க ஆசை சீரியல் குறித்த இந்த post-யை miss பண்ணாதீங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *