Jallikattu bulls

விஜயாவின் வீட்டிற்குள் பூகம்பத்தை அனுப்பும் சிந்தாமணி – வீட்டை விட்டு வெளியேறும் மீனா

விஜயாவின் வீட்டிற்குள் பூகம்பத்தை அனுப்பும் சிந்தாமணி

Source Credit – Vijay TV Instagram

இன்று சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட காத்திருக்கிறது, வீட்டுக்குள் சாமியாரை வரவைத்து பூஜை செய்தால் மனோஜிற்கு விவாகரத்து கிடைக்கும், ரவி ஸ்ருதி சண்டை முடிவுக்கு வரமுன்னு சொல்லி சிந்தாமணி அனுப்பிய சாமியார் என்ற பெயரில் ஏமாத்துக்காரியை விஜயா வரவைத்து மீனாவுக்கு பிரச்னையை கொண்டு வருகிறாள் அப்படி என்ன நடந்தது விரிவாக பாக்கலாம்

விஜயாவின் மூடநம்பிக்கை சிந்தாமணிக்கு கொண்டாட்டம்

விஜயாவின் வீட்டிற்குள் பூகம்பத்தை அனுப்பும் சிந்தாமணி

விஜயாவிற்கு எப்படியாவது மனோஜிர்க்கு ரோகினியிடம் இருந்து விடுதலை வாங்கி கொடுத்து நல்லபணக்கார பெண்ணாக பார்த்து திருமணம் செய்யணும், ஸ்ருதி ரவி சண்டை தீர்ந்து ஒன்றாக சேர்ந்து வாழனும் அதுக்காக சிந்தாமணியிடம் ஐடியா கேட்க, சிந்தாமணியோ நல்ல சாமியாரா அனுப்பி வைக்கிறேன் அவங்க பூஜை செய்து என்ன சொல்றாங்களோ,அதே அப்படியே செஞ்சுடுங்கனு சொல்லி அனுப்புறாங்க, அதே மாறி விஜயா வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லிவிட்டு காத்துக்கிட்டு இருக்காங்க

பெண் சாமியார் மீனாவுக்கு கொடுக்கும் ஷாக்

இந்த ஏற்பாட்டில் மனோஜ் மற்றும் விஜாயாவை தவிர மத்த யாருக்குமே பிடிக்கவில்லை, வேண்டா வெறுப்பாக தான் இருந்தாங்க, சிந்தாமணி அனுப்பிய பெண் சாமியார் வீட்டிற்குள் வந்ததும் கத கச்சிதமாக வேலைய பாக்க ஆரம்பிச்சிட்டாங்க, ஏதோ சாமி வந்தது போல் நாடக மாடி, மீனா தான் இந்த வீட்டிற்கு சாப கேடு என சொல்லி மொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் தள்ளினார்

மீனாவினால் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து

மீனா இந்த வீட்டில் இருந்தால் உங்க புருஷோனோடா உயிருக்கு ஆபத்து, அவளை உடனே இந்த வீட்டை விட்டு அனுப்புங்க, இல்லனா உங்க தாலி கண்டிப்பாக இறங்கும், நா சொல்றது தெய்வ வாக்கு னு சொல்லி உறுதியா சொல்றாங்க, இதை கேட்டதும் முத்துவுக்கு கோவம் தான் வருகிறது, மீனாவுக்கோ மனசே இல்ல கதறி அழுகிறார், விஜயா என்ன செய்வது னு திகைப்புல இருக்கிறார்

சிந்தாமணிக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய்

முத்துவிற்கு கோவம் வந்து அந்த பெண் சாமியார் விரட்டி விடுறாரு, ஓடி வந்த வேகத்தில் சிந்தாமணியிடம் சொல்ல, சிந்தாமணிக்கு சந்தோசம் தாங்கல, ஒரு பக்கம் மீனாவை வீட்டை விட்டு அனுப்ப கொளுத்தி போட்டாச்சு, இன்னோரு பக்கம் விஜயாவின் வீடு பத்திரம் வாங்கியாச்சு

விஜயாவின் முடிவு

விஜயாவின் வீட்டிற்குள் பூகம்பத்தை அனுப்பும் சிந்தாமணி

Source Credit – Vijay TV Instagram

ஏற்கனவே விஜயாவிற்கு மீனா பிடிக்காத மருமக, இப்போ இந்த சாமியார் வேற இந்த மாதிரி சொல்லிட்டாங்க, இனி அடுத்து விஜயா என்ன பண்ண போறாங்க, மீனா இனி அந்த வீட்டில் எப்படி இருக்க போறாங்கனு ரசிகர்கள் பெரும் ஆர்வத்தோட காத்திருக்கிறார்கள் என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்

இந்த சிறகடிக்க ஆசை சீரியலில் புது திருப்பம்: சிந்தாமணியின் ஆசை மகள் சத்யாவை காதலிக்கிறாரா? இதுவும் படிக்கவும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *