உன்னி ஏட்டா பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இவர் பாலக்காடு குட்டன். என்னடா மலையாளம் கலந்த தமிழ்ல பேசின உடனே அந்த ஏரோபிளேன் ஐயர் காமெடி ஞாபகம் வந்திருச்சா! அதுக்கு கொஞ்சம் மேலே போங்க நம்ம பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன் அவர்களுடைய பர்த்டே.
“என்னவளே அடி என்னவளே என் இதயத்தை திருடி விட்டேன்”
காதலில் விழுந்தவர்களுக்கும் சரி காதலில் தலைவர்களுக்கும் சரி இந்த பாடலை பாட அவர் காதலை ரசிக்கவில்லை காதலிப்பவர்களும் ரசிக்கவில்லை.
பி. உன்னிகிருஷ்ணன்
9 ஜூலை 1966 பாலக்காட்டில் பிறந்தவர். கர்நாடக இசையில் வல்லவர். கேரளத்து பின்னணி கொண்ட இந்த குடும்பம் ஆயுர்வேதமும் கலந்தது. உன்னிகிருஷ்ணனின் தாத்தா ஆயுர்வேத மருத்துவராக பணியாற்றியவர்.
கர்நாடக இசையில் பயின்றமையால் தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலேயே இசை வெள்ளத்தில் திளைக்கத் தொடங்கினார். ஏ. ஆர். ரகுமானின் இசையில் திரை உலகில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
தன்னுடைய முதல் பாடலிலேயே பல விருதுகளை தட்டி வென்றவர். தெய்வீகப் பாடல்களிலும் பல ஹிட்டுகளை தந்துள்ளார். தெய்வீக பாடல்களில் ஆன்மாவை ஒற்றி அமைய பாடல்களுடன் கலந்து உருகி பாடி இருப்பார். யேசுதாஸ் அவர்களின் ஐயப்ப பாடல்கள் பலவற்றை இவர் பாடியுள்ளார்.
‘உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே’
ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் தாயின் அன்பை உணர்வுப்பூர்வமாக காட்சியளிக்கும் வகையில் பாடலுள் ஊடுருவ செய்துள்ளார் உன்னிகிருஷ்ணன்.
‘அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே’
சைவம் படத்தில் தெய்வத்திருமகள் குட்டி சாரா வைத்து சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்த பாடல் ஒவ்வொரு குழந்தைகளும் பண்ணை அந்த கதாபாத்திரத்தில் நினைத்துக் கொண்டு தன் வீட்டாருடன் கட்டித்தழுவி மகிழ்ச்சியுர செய்யக்கூடியது. இந்தப்பாடல் தன்னுடைய மகளான உத்திரா உன்னிகிருஷ்ணன் மற்றும் உன்னிகிருஷ்ணன் இருவரும் இணைந்து வழங்கிய பாடல். தந்தையைப் போன்றே மகனும் பட்டிதொட்டி தோறும் பேசப்படுவார் என்று பறைசாற்றி உள்ளார்.
அவருடைய மகனும் சளைத்தவரல்ல. ஆண்களுக்கு அழகு முன்பு வீர விளையாட்டாக இருந்தது இன்று வீரமும் விவேகமும் விளையாட்டும் எனலாம். காலத்திற்கு தகுந்தாற்போல் நம்மை மாற்றிக் கொள்வது நமக்கு அழகு. அதற்கு தகுந்தார்போல் கிரிக்கெட்டில் விளாசி வாங்குகிறார் வாசுதேவ உன்னிகிருஷ்ணன்.
தற்போது சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் பாடல் போட்டிகளில் நடுவராக களம் இறங்கி கொஞ்சலான தமிழில் குழந்தைகளின் மனம் நோகாமல் கொஞ்சிய படியே ஊக்குவிக்கிறார் உன்னிகிருஷ்ணன்.
54 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் உன்னிகிருஷ்ணன் அவர்களுக்கு ஹாப்பி பர்த்டே.