தென்னிந்திய லதா மங்கேஷ்கர் பி.சுசீலா 83வது பிறந்ததினம்!
தென்னக்கத்து லதா மங்கேஷ்கர் கவிக்குயில் மெல்லிசை ராணி என தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா இடம் பெற்றவர் பி.சுசிலா இவரின் பிறந்தநாள் இன்று.
தெலுங்கை தாய்மொழியாக கொண்ட பி.சுசிலா தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். தமிழ் கலாச்சாரத்தில் பாடல்கள் வாழ்க்கையில் இணைந்த ஒன்று.
இசைப்பாடலில் புலமை பெற்றவர்
பி.சுசீலா அல்லது புலப்பாக்க சுசீலா ஆந்திர மாநிலம் நவம்பர் 13, 1935 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் விஜயநகரில் பிறந்தவர். கர்நாடக இசைப்பாடலில் புலமை பெற்றவர்.
இந்திய மொழிகளில் 40 ஆண்டுகளுக்கு மேல் பாடல்கள் பாடியுள்ளார். 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஆந்திராவில் புகழ்பெற்ற இசைமேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றவர்.
சுசீலா 1950 ஆம் ஆண்டில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். சுசீலாவின் அபார இசை ஞானத்தை அங்கிகரித்த இயக்குநர் கே. எஸ். பிரகாஷ்ராவ் இயக்கத்தில் பெற்றதாய் படத்தில் முதன் முதலில் பின்னனி பாடினார்.
பத்மபூஷன் விருது
1969 ஆம் ஆண்டில் அகில இந்தியப் பாடகிக்கான பரிசைப் பெற்றுக் கொண்டார். 2008 இல் வெளிவந்த சில நேரங்களில் என்ற திரைப்படத்தில்பொட்டு வைத்த என்ற பாடலைப் இறுதியாகப் பாடினார். 2008 ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மபூஷன் விருது பெற்றார். தேசிய அளவில் மிகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதினை ஐந்து முறைகள் பெற்றுள்ளார்.
சுசீலாவின் சிறப்பு வாய்ந்த பாடல்களளான பாலும் பலமும், முத்தான முத்தல்லவோ, லவ்போர்ட்ஸ் மற்றும் உன்னைக் காணாத, மன்னவனே, பார்த்த ஞாபகம், உன்னை ஒன்று கேட்பேன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம், வாழநினைத்தால் வாழலாம் போன்ற பாடல்கள் மிகச்சிறப்பானது அனைவராலும் இன்று வரை விரும்பி கேட்கப்பட்டு வரும் பாடல்கள் ஆகும்.
பெரும் புகழ்வாய்ந்த இசை ஞானம் பெற்ற பாடகியான சுசீலா அவர்களின் 83வது பிறந்த நாளினை வாழ்த்தி வணங்குவோம்.