பிறந்தநாள் கொண்டாடும் என்றும் இளமையான பாடகர்
அனுராதா ஸ்ரீராம் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
‘கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு’
ஹா இன்னிக்கும் இந்த பாட்ட கேட்டா நம்ம தல தன்னால ஆடும். அந்தப் பெருமை எல்லாம் நம்ம அனுராதா ஸ்ரீராம் தான் போய் சேரும்.
அனுராதா ஸ்ரீராம்
9 ஜூலை 1970 இல் பிறந்த அனுராதா ஸ்ரீராம் கர்நாட்டிக் இசை பயின்ற சென்னைவாசி. தமிழ் பாடல்கள் மட்டும் இல்லாம தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தினு எல்லா மொழியிலும் பாடுவாராம். இந்திய மொழிகள் மட்டுமல்லாமல் சிங்கள மொழியில் பாடல் பாடி இலங்கையிலும் இவரோட புகழ் விரிந்து இருக்கு.
1980ல் 10 வயது குழந்தையாக இருக்கும்போதே தமிழ் சினிமா காளி என்கிற படத்தில குழந்தை குணச்சித்திர நடிகையா வந்திருக்காங்க. இவங்க குரல் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் 12 வயதிலேயே ரேடியோ மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் வெளிவந்திடிச்சு.
திரை உலகின் ஆஸ்கர் நாயகனான ஏ. ஆர். ரகுமான் பம்பாய் படத்தில வர ‘மலரோடு மலரிங்கு’ பாடலில் குழு பாடகராக அனுராதா ஸ்ரீராமை 1995 அறிமுகப்படுத்தினார். இசைப் பயணத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி சாதனை படைத்திருக்காங்க.
கர்நாடக இசை அறிந்தவராக திரையுலகில் மட்டும் பாடாமல் பல மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். அதேபோல் பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.
“அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை”
இந்தப் பாடலுக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் பெரியோர்கள் என அனைத்து இந்தியர்களும் தன் குருதியில் இருக்கும் கம்பீரத்தை எழ செய்து அடிமை வாழ்க்கையிலிருந்து வெளிவர வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்க வல்லது.
இவ்வாறு அனுராதா ஸ்ரீராமின் பயணத்தை அடுக்கிக் கொண்டே போகலாம். அதேபோல் அவர் வாங்கிய விருதின் பட்டியலும் பெரிது. சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான தமிழக மாநில விருது, சிறந்த பாப் ஆல்பத்திற்கான ஸ்கிரீன் வீடியோகான் விருது, டாக்டர் ஜே. ஜெயலலிதா சினி விருது, சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான அஜந்தா விருது மற்றும் சிறந்த பின்னணிப் பாடகருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதுகள் பிலிம்பேர் விருது மேற்கு வங்க மாநில விருது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்று அரை சதம் அடிக்கும் அனுராதா ஸ்ரீராம்க்கு பிறந்தநாள்