அழகு குறிப்புகள்

மிகச் சுலபமான மூன்று “ சிகை அலங்காரங்கள்”

                               

பல விதமான ஹேர் ஸ்டைல்களை முயற்சி செய்து சலித்துப்  போய்

 விட்டீர்களா ?

 கவலை வேண்டாம் மிக அதிகம் மெனக்கிடாமலே நேர்த்தியான , பிறரைக் கவரக்கூடிய , நம் முகவாகிற்க்கு ஏற்றார்ப் போல ஜம் என பொருந்தும் சிகை அலங்காரத்தை உங்களுக்கு சொல்லித்தரப் போகின்றேன் .

இந்த அலங்காரத்திற்கு வெறும்  சாதாரண சீப்பு மற்றும் சில  ஹேர் கிளிப்புகளே போதும் ! ஆம் ஹேர் ட்ரையர் , ஸ்ட்ரெயிட்டனர், ஸ்பிரே ,சொலுஷன் , ஜெல், போன்ற எந்த சாதனமும் தேவையே இல்லை . 

 ஸ்டைல்  நம்பர் ஒன்:

மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தை கவனமாக பாருங்கள் . இந்த சிகை அலங்காரத்திற்கு இரெண்டே சீப்பு மற்றும் சில கிளிப்புகளே போதும். இது அதிக முடி அல்லது நீள கூந்தல் கொண்டோருக்கு மிக கச்சிதமாக பொருந்தும்.

கூந்தலை இரண்டாக பிரித்துக்கொண்டு படத்தில் காட்டியபடி பக்கவாட்டில்கிளிப்பைப்போட்டு விடவும். முடி முன்னேவும் வராது , தோற்றத்தையும் மேலும் அழகாக்கும்.

ஸ்டைல் நம்பர் டூ:

இது சற்று கவனமாக செய்யக்கூடிய சிகை அலங்காரம் , சிறிது முடியை லாவகமாக மேலேதூக்கி படத்தில் காட்டியபடி கவனமாக ஹேர் கிளிப்புகளை சொருகினாள் , கண்கவரும் ஒரு தோற்றத்தைப் பெறலாம் . முடியை கவனமாக எடுக்காவிடில் எடுபடாது .

ஸ்டைல் நம்பர் த்ரீ:

இது நேர்த்தியான “ப்ரொபெஷனல்” லுக்கை மிகவும் எளிதாக ஏற்படுத்தித்தரும் சிகை அலங்காரம். 

முடியை சற்று கொத்தாக எடுத்து மேலே தூக்கி , முகவாட்டிற்கு தகுந்தாற்போல இறுக்கி , இடுக்கி பின்னி கிளிப்பை போட வேண்டியது தான்.

என்ன நேரம் விரயமின்றி  மிக எளிதாக சிகையலங்காரத்தால்  அனைவரையும் அசத்தத் தயாரா?

  ம்ம் கலக்குங்கள் .

சா.ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *