மத்திய அரசு வேலைவாய்ப்பு அனுபவம் தேவையில்லை
மத்திய அரசு வேலைவாய்ப்பு. வேலூரில் இருக்கும் தென்னிந்திய மாநிலங்களில் விவசாய கூட்டுறவு அமைப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
சிம்கோ அக்ரி என்று சொல்லப்படும் சவுத் இந்தியன் மல்டி ஸ்டேட் அக்ரிகல்ச்சர் கார்ப்பரேஷன் சொசைட்டி லிமிடெட் 44 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மூன்று பதிவிகளில் 44 பணியிடங்கள் காலியாக இருப்பதை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் வரவேற்கப்படுகிறது.
பணியிடங்கள்
அலுவலக உதவியாளர்-8 விற்பனையாளர்-20
மேற்பார்வையாளர்-16
கல்வி தகுதி
அரசு அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு/ டிப்ளமோ அல்லது இதற்கு இணையான படிப்பில் 60 சதவீத தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட சதவீதத்திற்கு இணையான மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணபிக்க தகுதியானவர்கள் என சிம்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயதாக 21ம் அதிகபட்ச வயதாக 30ம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவரவர் பிரிவுகளுக்கு ஏற்றவாறு வயது வரம்பில் சற்று தளர்வுகள் உண்டு.
அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள அதிகாரபூர்வமான அறிவிப்பு இதோ
சம்பள வடிவம்
பதவிக்கு ஏற்றவாறு சம்பள வடிவம் அமைந்துள்ளது.
அலுவலக உதவியாளர்: ₹5600-16200 விற்பனையாளர்: ₹6200-20600
மேற்பார்வையாளர்: ₹6800-26200
தகுதிகாண் காலத்திற்கு மேற்கூறிய சம்பள வடிவம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தகுந்த பயிற்சி அளிக்கப்பட்டு வெவ்வேறு துறை பணிகளில் நியமிக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க
சிம்கோ அக்ரி நிறுவனத்தில் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பம் வடிவில் விண்ணப்பங்களை தபாலில் சமர்ப்பிக்கவும். விண்ணப்ப வடிவத்தை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
http://www.simcoagri.com/job_list.html
விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 250 செலுத்த வேண்டும். பிரிவுகளுக்கு தகுந்தவாறு சலுகைகள் உண்டு.
தேர்வு முறை
எழுத்துப் பரீட்சை, ஆவணங்கள் சரிபார்த்தல் மற்றும் நேர்காணல் என மூன்று நிலையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முக்கியமான தேதிகள்
விண்ணப்பங்கள் அலுவலகத்தை 23-09-2020 மாலை 4:30 மணிக்குள் தபால் மூலம் சென்றடைய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வமான இணைய தளத்தை பார்க்கவும்.