சினிமா

நடிகர் சிம்புக்கு சீக்கிரம் டும் டும் டும்

நடிகர் சிலம்பரசனுக்கு திருமணம் குறித்து வைரல் தகவல்கள் பரவிய வண்ணம் உள்ளன. நடிகர் சிலம்பரசன் ஒரு காதல் இளவரசன் என்று சொல்லலாம். அவர் வாழ்வில் சினிமா துறையில் பல காதல்கள் வந்ததும் செல்வதுமாக இருந்தது. சிறுவயதிலிருந்து சினிமாவில் நடிப்பதால் சிலம்பரசனுக்கு என்று பல ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் சிலம்பரசன் திருமணம் மட்டும் தாமதமாவது அவருடைய அப்பா ராஜேந்திரனுக்கு கவலையளிப்பதாக இருப்பதாக தெரிகின்றது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் சிம்பு கவலைப்பட்டதாக தெரியவில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார். இந்நிலையில் சிம்புவின் திருமணம் குறித்து விடிவி கணேஷ் ஒரு பொறியை கொழுத்தி விட்டுள்ளார் என்று சொல்லலாம், அது விரைவில் சிம்புவுக்கு திருமணம் நடக்கும் என்று விடிவி கணேஷ் ஆன்லைனில் தெரிவித்திருந்தார்.

ரசிகர்கள் குஷியாக உள்ளனர் தங்களது அபிமான நடிகருக்கு திருமணம் ஆகையால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

மாநாடு:

சிலம்பரசன் தற்போது மாநாடு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். கொரானா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்குகின்றார்.

ஊரடங்கு காலத்தில் சிம்பு வீட்டில் சமைப்பது மற்றும் அவர்கள் செய்வதெல்லாம் வீடியோக்களாக வெளிவந்து ரசிகர்கள் பக்கம் அவரது அலைகளை எழுப்பி உள்ளது. அதற்கான ரீச்சும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்த நிலையில் ஊர்டங்கில் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட விடிவி குறும்படம் பெரிய வைரலானது. பல மீம்ஸ் மன்னர்களின் தீமாக மாறியது என்றும் கூறலாம். வழக்கம் போல இயக்குனர் கவுதம் மேனன் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்டுகளுக்கு ஆளானார். லாக்டவுனில் சிம்பு பேசிய இரட்டை அர்த்த வசனங்கள் கௌதம் மேனன்னுக்கு வைத்து காய்ச்சப்பட்டது. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்பது போல் கௌதம் மேனன் கூலாக கடந்து சென்றார்.

சிலம்பரசன் தன் நெருங்கிய உறவினர் வீட்டுப் பெண்ணை மணப்பத்தாக தகவல்கள் பரப்பபட்டன ஆனால் அது உண்மை இல்லை என்பதை அவரே வெளியிட்டுள்ளார். எது எப்படியிருந்தாலும் சிம்பு என்றால் சீரியஸாக மக்களிடம் ஒரு சீன் இருக்கத்தான் செய்கின்றது. அவருடைய படம் ரிலீசாக தாமதம் ஆனாலும் ரசிகர்கள் படை குறையவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *