ஆன்மிகம்ஆலோசனைதமிழகம்வாழ்க்கை முறைவாழ்வியல்

தாலிக்கயிறு மாற்றும் போது பின்பற்ற வேண்டியவை

குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்க நம் முன்னோர்கள் சில நியதிகளை நமக்கு ஆபத்து கொடுத்துள்ளார்கள் அதில் பெண்களுக்கே உரித்தான அணிகலனாக தாலிக் கயிறு உள்ளது.

முற்காலத்தில் தாழ ஓலையினால்(பனை ஓலை) திருமணம் செய்யக்கூடிய ஆண் மற்றும் பெண்ணின் பெயர் அவர்களின் விவரங்களை எழுதி அதில் மஞ்சள் தடவி தனியாக கட்டிக்கொள்வார்கள் தாழ ஓலையினால் கட்டிக்கொள்வதில் இருந்து தாலி என்ற சொல் வந்தது.

உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு தங்கம் பெண்களுக்கு உகந்த உலோகம் ஆவதால் தாலிக்கயிறு தங்கத்தில் அணிந்து கொண்டனர்.

பொதுவாக தாலிக்கயிற்றில் 16 கயிறுகள் கொண்டதாக இருக்கும். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று நம் முன்னோர்கள் சொல்வதற்கு ஏற்ப பதினாறு செல்வங்களையும் தம்பதிகள் பெற்று சீரும் சிறப்புமாக குடும்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்கின்ற காரணத்தினால் தான் 16 கயிறுகள் கொண்டு தாலிக்கயிறு கட்டப்படுகிறது.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்த பெண்ணின் தாலிக் கயிறு மாற்றக்கூடிய முறைகளை பார்ப்போம்…

தாலிக்கயிறை எப்போது மாற்றலாம்

தாலிக்கயிறை திங்கள் , செவ்வாய் , வியாழன் ஆகிய கிழமைகளில் மாற்றலாம்

மாதத்தில் இரண்டு முறை வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி தசமி ஆகிய இரு நாட்களில் மாற்றலாம்.

அவரவர் ஊரில் வரக்கூடிய அம்மனின் திருக்கல்யாண வைபவ நாட்களில் மாற்றலாம் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை மற்ற எந்த கிழமைகளில் வந்தாலும் மாற்றுவதில் தவறில்லை.

ஆடிப்பெருக்கு அன்று மாற்றலாம்.(வெள்ளிக்கிழமை வந்தாலும் மாற்றலாம்)

“மாசிக் கயிறு பாசி ஏறும் வரை நிலைத்திருக்கும்” என்று சொல்வதற்கு ஏற்ப மாசிமகத்தன்று தாலி கயிறு மாற்றுவது மிக சிறப்பான ஒன்று.

தாலிக்கயிறு மாற்றும் நேரம்

பொதுவாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் மாற்றுவது நமக்கு மிகுந்த நன்மையைக் கொடுக்கும்.

அம்மனின் திருக்கல்யாண வைபவம் நாட்களில் மாற்றினால் திருக்கல்யாணம் நடைபெறும் கூடிய நேரத்தில் மாற்றலாம்.

தாலிக்கயிறு மாற்றும் போது கடைப்பிடிக்க வேண்டியவை

தாலிக்கயிறு மாற்றும் போது இந்த ஒரு சில விஷயங்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

தாலிக்கயிறு மாற்றும் போது அருகில் மற்ற யாரும் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது நன்று

எப்பொழுது தாலிக்கயிறு மாற்றும் போது மிக கவனமாக மறக்காமல் செய்ய வேண்டிய ஒன்று நமது பழைய தாலி கயிறை கழற்றுவதற்கு முன்பு சாதாரண ஒரு மஞ்சள் கயிறை நம் கழுத்தில் அணிந்த பின்பே கழற்ற வேண்டும்.

தாலிக்கயிறை முன்பக்கமாக மட்டுமே கழற்ற வேண்டும்.

தாலிக்கயிற்றில் உள்ள உறுப்புகளை வெறும் தரையில் வைக்கக்கடாது.அது ஏதாவது ஒரு துணியில் வரிசையாக வைக்க வேண்டும்.

புதிய தாலிக்கயிற்றை முதலில் அம்மனிடம் வைத்து நன்றாக அம்மனை வேண்டி வழிபட்ட பின்பு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து உங்கள் கணவர் கைகளாலும் அல்லது கணவர் இல்லாத நேரத்தில் நீங்களே தாலிக்கயிற்றை மாற்றிக்கொள்ளலாம்.

அடிக்கடி தாலிக்கயிற்றை மாற்றுவது என்பது நல்ல செயல் அல்ல .குறைந்தது வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே மாற்றும் முறையை பின்பற்றி கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க : தீர்க்க சுமங்கலி பாக்கியம் ஆடி கடை வெள்ளியில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *