நாம் எடுத்துக்கொள்ளும் வைட்டமின் அதிகமானால் என்னவாகும்
அன்றாட உணவில் வைட்டமின் டி சேர்க்கும் முன்பு ஒரு நிபுணரை அணுக வேண்டும். வயது, பாலினம் மற்றும் உடலில் இருக்கும் மருத்துவ நிலைமைகளுக்கு ஏற்ப சரியான அளவை மருத்துவரால் மட்டுமே பரிந்துரைக்க முடியும். உடலில் அதிகப்படியான கால்சியம் சேரும்போது குமட்டல், வாந்தி மற்றும் பசியின்மைக்கு வழிவகுக்கின்றது.
உடலில் அதிகமான கால்சியம் சேரும் போது ஏற்படும் பக்க விளைவுகளை ஆய்வுகளில் விளக்கியுள்ளனர். எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை பரிந்துரைக்கப்பட்ட அளவில் உட்கொள்வது அவசியம்.
வைட்டமின் டி கட்டாயம் என்பதால் அதிகமாக உட்கொள்ளும் போது எலும்புகளில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி உடலில் அதிகரித்தால் வயிற்றுவலி, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பல செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சில நேரங்களில் மற்ற பிரச்சனைகளின் அறிகுறிகளாக கூட இருக்கலாம். கூடுதல் மருந்துகளை எடுத்துக் கொள்வதாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமாகும். சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள் வைட்டமின் டி மாத்திரைகளை எடுக்க விரும்பினால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
வைட்டமின் டி அளவுக்கு அதிகமாக இருந்தால் சிறுநீரக நோய்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகின்றன. உண்ணும் உணவில் வைட்டமின் டி, கால்சியம் அதிகம் ஆகும் போது பசியின்மை, மலச்சிக்கல், குமட்டல், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இது போன்ற பல பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான ஒன்று உணவில் இருந்து கால்சியத்தை உறிஞ்ச உதவும். பல நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. இதுவே அதிகமானால் பலவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.