சிவப்பு மஞ்சள் பச்சை-அடடா என்ன ஒரு பாசம்
சிவப்பு மஞ்சள் பச்சை படம் 2019 இல் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.
டிராபிக் சிக்னல் வண்ணத்தில் பெயரைக் கொண்ட இப்படம் சித்தார்த், ஜிவி பிரகாஷ், லிஜோமால் ஜோஸ் மற்றும் காஷ்மிரா பரதேசி என இரண்டு முன்னணி ஜோடிகளுடன் கதை பயணிக்கிறது.
சிவப்பு மஞ்சள் பச்சை படம் மக்களிடையே நல்ல விமர்சனங்கள் பெற்று வரவேற்கப்பட்டது. போக்குவரத்துக் காவலர் மற்றும் ரேஸிங் இளைஞருக்கு நடுவே மோதலில் ஆரம்பித்து உறவில் முடிகிறது.
திரைப்படக் கதையில் காதலை விட அக்கா தம்பி பாசம் அமோக வரவேற்பை பெற்றது. சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் அருமையான பாடலுடன் இத்திரைப்படத்தின் ஒரு வருட வெற்றி விழாவை கொண்டாடுவோம்.
https://www.instagram.com/reel/CEyZ3I9hN-f/?igshid=th7kyawzwmov
பாடல்
ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே
விரலினை தாண்டிடும்
நகமென இவன் பாசமே
கிரீடமா பாரமா
புரியுமா சில நேரமே
இவன் அண்ணன் பாதி
தந்தை மீதி
ஆனானே ஆனானே
தம்பி என்ற
நிலையை கடந்து
போனானே போனானே
அக்காவுக்கு வெளியுலகத்தில் பாதுகாவலனாக இருக்கும் தம்பியாக இப்பாடலில் சித்தரிக்கப்பட்டு இருப்பது மிகவும் அழகாக இருக்கும்.
உறங்கும் போதும்
இவனின் கவனம் உறங்கி போகாது
கனவில்கூட காவல் செய்யும்
கடமை மறவாது
உலகமே இவளென இவன்
வாழும் அழகை பாரடா
மகள் என வளர்க்கிறான்
இவன் உயரம் குறைந்த தாயடா
இவனின் அன்பை அளந்திட
எந்த மொழியும் போதாது
தம்பியாக இருந்தாலும் வீட்டின் ஆண்மகனாக பொறுப்புடன் சித்தரிக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் பாராட்டத்தக்கது.