உருப்பட்டு போகும் போ!!!
கந்தன் நெல் கரும்பு அறுவடை முடித்த கையோடு வரவு செலவு கணக்கிட்டு, “அம்மா இந்தாங்க நம்ம களத்து மேட்டு கணக்கு வழக்கு இந்த நோட்ல நோட் பண்ணிருக்கேன். நீங்க கல்யாணி அக்காவோட கணக்கு வழக்கு முடிச்சுருங்க. நான் நாளானைக்கு சிட்டிக்கு போறேன்னு சொல்லியிருந்தேனில்லம்மா, நம்மளோட ஆறு மாசத்தோட பண்ணத்தோட்டத்து வேலை எல்லாம் ஒவர். நீங்க ஜாலியா என்ஜாய் பண்ணுங்கம்மா” என்றான் கந்தன். இராமாத்தாள், “சரிப்பா தம்பி நீ பாத்து போ ராசா. நா பெத்த வைரமே, வைராக்கியமா சிட்டில ஆறு மாசம், இந்த கிராமத்துல ஆறு மாசமுனு அலையா அலையுர, வேணாப்பா நமக்கு விவசாய வம்பு” எனக்கூற. அதற்கு, “இல்ல, இல்ல அம்மா நம்ம அப்பா மற்றும் சொந்தபந்தத்தின் தொழிலே விவசாயம் தானம்மா! அத நான் எப்படி விடுவேன், நான் சொந்தமா என் ஃபிரன்ஸோட தான் சாப்ட்வேர் டெவலப் பண்றமா. நான் ஆறு மாசம் அவுங்க கூட இருப்ப, தென் அவுங்க ஆறு மாசம் கவனிச்சுப்பாங்க, நாங்க பெர்ஃப்க்டா இருக்கோம். அப்புறம் என்னம்மா ப்ராப்ளம்,, விடுங்கம்மா!…
சரி! நா போய் ரெடியாகுறேன். லக்கேஜ் ரெடி பண்னணும்மா” என்றான் கந்தன். அதற்கு ராமாத்தாளிடம் இருந்து, “சரி ராசா நீ போய் கிளம்பு, அம்மா ஊருக்கு தேவையான தின்பண்டங்களை கட்டறேன்”. என்று வேலையை தொடங்கினாள். கந்தன் பொழுது விடிந்து, பொழுது போக மறுநாள்,, கிளம்பி வாசலில் தன் தாய்க்கு பிரியா விடை கொடுத்தான். பக்கத்து வீட்டு கல்யாணி அக்காவிடம் கூறிவிட்டு கிளம்பும் வேளையில் கடைசியா,
“கிராமத்து காத்தே உன்ன சுவாசிச்சுகிறேன், இனி அடுத்த ஆறு மாசம் கழிச்சுதான் உன்ன சுவாசிக்க முடியும், உன்ன விட்டு போக விருப்பம் இல்ல தான்,,,, ஆனாலும் வேற வழியில்ல, பிரியா விடை கொடு என் பிரியமான மண்ணே” என்று தன் மனதுக்குள் கண்ணீர் கவிதை உதிர்த்து கிராமம் கடந்தான்.
பேருந்து,, நகர ஆரம்பித்து விட்டது.
அக்கடா வென்ற தூக்கம், அதன் இடையிடையே மேய்த்த மாடுகள்,
மண்வாசனை, பச்சை புல்வெளிகள் என ஊர் நினைவுகள் உறவாடி சென்றன. நன்றாக உறங்கி விழிக்கும் வேளையில், விர்!… விர்!… விர்!… குய்!… குய்!… குய்!… என ஹார்ன் சத்தம், ஒரு வித வெப்ப சூழல், இவை கந்தனுக்கு நகரம் வந்து விட்டது, என்பதை உணர்த்தியது. ‘சிட்டி’ வந்துட்டோமா வாவ்!… ஆபீஸ்ல முகேஷ் என்ன பண்றான் மத்த ஃப்ரண்ஸ் எல்லாம் இந்நேரம் ஃப்ராஜெக்ட் ஃபினிஷ் பண்ணி இருப்பாங்களா? எதுவும் டியூடு நம்ம கிட்ட சொல்லல,, ஒகே சிட்டிய ரீச் ஆகிட்டோம் முகேஷ் பிக்கப் பண்ண வருவான்ல ரூம்ல போய் தெரிஞ்சுக்குவோம்”,,, என்று ஜன்னல் வழியே சிட்டியை பார்க்க
ஆச்சரியம்!!,,
வியப்பு!!!
அதிர்ச்சி!!,,
திரு திருவென முழித்தான்!!!
அங்கே சாலை ஓரத்தில் மரக்கன்றுக்கள், எறும்பு கூட்டங்கள் போல் மாணவப்படைகள், செடிகளை கண்காணிக்கும் குழுக்கள்,, ஞாயிறு என்பதை மறந்து சீருடை அணிந்திருக்கிறார்களா என்று யோசிக்கிறான் கந்தன். ஐம்பது மரக்கன்றுகளுக்கிடையே ஐந்து பேர் கொண்ட குழு சாரை சாரையாக சென்றது என்.எஸ்.எஸ் டீம் மாணவர்களுடன்… மேலும் “இதென்ன இங்க பஸ் ரூட் இவ்ளோ கிளீனா டிராபிக் இல்லாம இருக்கு!,, ‘வாவ்’! வாட் ஏ ஆட்ட், சிட்டி வால்ல!!! எப்பிடி இவ்ளோ அழகா பளிச்சுன்னு!!!
கண்தானம் பண்றது!!
உடலுறுப்பு தானம் செய்வீர்!!
ப்ப்ப்பபொதுதுது இடங்களை ப்ப்ப்பாதுக்காதத்ல்,,,,,,,,
இச்சே ஏன் இவ்ளோ மட்டமா தமிழ் படிக்கிறோம் எல்லாம் டச் விட்டு போச்சு!! முதல்ல இத டெவலப் பண்ணனும் ப்ப்பப்ப்ப்பா“.
இவ்ளோ அறிவா, ஆழமா ஆட்ட் போட்டிருக்காங்களே என்ன இங்க எதாவுது பெஸ்டிவலா!!!!… என்ற யோசனையில் மேலும் பார்க்க பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. நகர வீதீகளில் மாணவர்கள் ஐந்தடிக்கு ஒரு மாணவனும், பதினைந்து அடிக்கு இரண்டு மாணவர்களும் நின்று போக்குவரத்தை சரிசெய்தனர். திசைக்காட்டும் கருவிகள் புதிதாய் மின்ன,
காவல்துறையுடன் கல்லூரி வயது மாணவர்கள் வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் காட்சி பெரும் பரவசத்தை தந்தது. பேருந்து செல்ல செல்ல!!! ஆங்காங்கே அழகழகாக அமைந்த பிளாட்பாரம் ஷாப்ஸ்!!!,,,, என்னடா இது கடைகள்ல ஒரு ஈ கூட இல்ல,, நம்ம பாக்கறது கனவா இல்ல நினைவா!!!,, என்று தன்கையை கிள்ளிக்கொணடான். மேலும் ஃபிளாட்பார வீதியிலே மக்கள் சரியாக சென்றனர். அங்காங்கே துப்புரவு தொழிலாளர்கள் ,அவர்களுக்கு அருகில் மாணவர்கள். கையில் டீ, இளநி, சூஸ்,,,,
”வாட் ஏ மெடிக்கல் மிராக்கள்,, வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர்“ என்று உள்ளுக்குள்ளே ஆச்சர்ய கேள்விகளுடன்.,,,,
‘இவங்கள மனுசங்களாவே மதிக்க மாட்டாங்களே,, இப்போ என்ன இவ்ளோ ரெஸ்பெக்ட்!! எங்கயோ!!! இடிக்குதே” என்று கந்தன் வாய் பிளக்கிறான். போகிற வழியில் பிளாட்பாரத்தில் வசிக்கின்ற மக்களை காணோம்!” என்னடா இது அவுங்கள துரத்திட்டாங்களா, ”என்ற ஒரு வித தவிப்பு!!……
பேருந்து,, இறுதியில் நிறுத்ததை அடைந்தது . திகைப்பில் இருந்து வெளியேறி உடைமைகளை சரி செய்து கிழே இறங்கினான் கந்தன். எங்கே இந்த முகேஷ் என்ற தேடல் அப்பொழுது ஒரு இன்ப அதிர்ச்சி!..
ஹே!!! ஆறு மாசம் முன்னாடி பாத்த பஸ் ஸ்டாண்டு இப்படி இல்லையே இவுங்க என்ன புதுசா இப்படி பண்ணியிருக்கங்க“. என வியந்தான்.
ஆங்காங்கே பேருந்துகள் அணிவகுத்து நின்றன.
அடுத்து நின்ற மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, தேவைகளை அறிந்து, சரியாக வழிகாட்டிக் கொண்டிருந்தனர் யூனிபார்ம் அணிந்த மாணவர்கள். அடடா!.. என்ன இங்கயும் இந்த பசங்க!!! என்று,, மேலும் காண பேருந்து நிறுத்தத்தில் ஆங்காங்கே ஒரு பெட்டியிருந்தது. அதனுள் மக்கள் ஆளுக்கொரு தொகையிடுவதை கண்டு,, இது என்ன்?,, என்று ஆராய்ந்து அருகில் சென்று பார்த்தான்.
மாணவன் ஒருவன் பெட்டியின் அருகில் இருந்தான்.
.இதென்னப்பா நியூ சிஸ்டம் என கந்தன் வினவ??…..
“அண்ணா இது ‘நமக்கு நாமே திட்டம்‘, நீங்க எவ்ளோ குடுக்க முடியுமோ அவ்ளோ குடுங்க இந்த ஃபண்ட நம்ம டிஸ்டிக்கோட தேவைக்கு யூஸ் பண்ணாலாம். நீங்க வழியில பாத்திரிப்பீங்க துப்புரவு தொழிலாளர்களுக்கு
டீ, காஃபி ,சூஸ், கொடுக்க கெல்ப்ஃபுல்லா இருக்கும் அண்ணா” என்றான்
அண்ட்!..
இந்த ஃபண்ட நம்ம டிஸ்டிக்கோட சின்ன,, சின்ன தேவைக்கு யூஸ் பண்ணலாம் அண்ணா இது மூலம் அரசின் கடுகளவு பாரம் குறைக்கலாம்” என்று பேசிய மாணவனின் பேச்சு கந்தனுக்கு வியப்பு தந்தது.
உடலெல்லாம் புல்லரிப்பு,, தேனை மொய்க்க பறக்கும் பட்டாம் பூச்சிகளைப் போல் பரவசம்.
ஓ ஐ சி!!,,,
என்று கூறி களத்துமேட்டில் சம்பாதித்ததில் தாய் கொடுத்த பங்குத் தொகையிலிருந்து ஆராயாமல் ஆயிரம் ரூபாய் இட்டான் கந்தன். அதனை கண்ட மாணவன் பரவசத்துடன் இரு கரங்கள் கூப்பி நன்றி அண்ணா! தேங்க்ஸ் அ லாட்!! என்றதும் ஒரு இனம் புரியாத சிரிப்பு இருவருக்கும். அருகே முகேஷ்,, கந்தனின் நண்பன்
மூச்சுவிடாமல்!!!!…
டேய் மச்சான் கந்தா!!! கந்தா!! சாரிடா லேட்டாயிடுச்சு,, நீ கால் பண்ணி சொன்ன, முழுச்சுடலாம்னு நினச்சு நல்லா தூங்கிட்டேன் மச்சான். அப்புறம் அம்மா எப்டியிருக்காங்க!,,
கந்தனுர், களத்துமேடு கழநீர் தொட்டி, காங்கயம் காளை, நம்ம அண்ணக்கிளி, ஒரு அடுக்கு மாடி வீடு, பல்லுபோன பாட்டி, அண்டு நம்ம ஊர் தாவணி ப்யூட்டிஸ்!,,,, ஆல் ஆர் ஃபைனா,, ஹப்பியா!! என்றான்.
கந்தன் பதில் தராமல்,, ”என்னடா மச்சான் இது!,,, நான் ஊருக்கு போயி ஆறு மாசம் தானே ஆச்சு!!! இங்கென்னமோ ஆறு வருஷம் ஆன மாதிரி மாற்றம் தெரியுது. ஹ்வ் இட்ஸ் ஃபாஸிபல்.
”எங்க பார்த்தாலும் ஸ்டுடண்ஸ் பட்டாளம் என்னடா!!! வாட்ஸ் கேப்பனிங் டா!!! யாராவது மந்திரி!!,, வர்ராங்களா? என்னடா இங்க நடக்குது ஒரு மேட்டரும் போன்ல நீ சொல்லவே இல்ல.
டேய் காலேஜ் பாய்ஸ், கேள்ஸ் அப்புறம் கலக்கல் தியேட்டர் எல்லாமே மாறிடுச்சுடா. பொதுவா லீவ்னா டேட்டிங் போவங்க,, இல்லைண்ணா தியேட்டர்னு நிறையபேர் சுத்துவாங்க இப்ப முக்கால் வாசிபேர் அந்த மாதிரி இல்ல,,, செடி, மரம், ,நிதின்னு டோட்டலா மாறிட்டாங்க,, முகேஷ் என்னாச்சுடா இங்க…” என்று கந்தன் கேட்க!! அதற்கு முகேஷ் “டேய் மச்சான் நீ சொல்ற மாற்றம் கம்மி இன்னும் நீ முழுசாய் பாக்ல,, பாத்தா இப்படி பேசமாட்ட இன்னும் இருக்கு வா ரூம்ல போய் பேசுவோம்,,
சரி நான் கேக்றதுக்கு பதில் சொல்லு “எங்க என்னோட எள்ளுருண்டை,, அப்புறம் கருவாடு,, வத்த குழம்பு அம்மா செஞ்ச அதிரசம்,, ஆயா சுட்ட ஆப்பம் புளி சட்னி எல்லாம் கொண்டு வந்தாயா,,” என்று ஆசையாசயா முக்கேஷ் கேட்க,,
ம்!! ம்!!! அம்மா எல்லாம் கொடுத்தாங்கடா, சரி வா போகலாம் “என்று கிளம்பினர். முகேஷ் ஒரு நகரத்துவாசி ஆனால் தமிழ் சினிமாவின் கிராமத்து வாசனை மூலம் கிராமத்துவாசிகளை நேசிக்கக் கற்றுக்கொண்டான்.
முகேசும், கந்தனும் கல்லூரி மற்றும் எம்.என்.சி கம்பெனி வரை ஒன்றாக இருந்தவர்கள். நல்ல புரிதல் கொண்டவர்கள், இருவருக்கும் நல்ல நாகரீக பரிமாற்றமுண்டு.
ஹோண்டா பைக்கில் இருவரும் ரூம் நோக்கி நகர மீண்டும் கந்தனுக்கு நகர மாற்றத்தின் காரணம் தொற்றிக்கொண்டது. “டேய் மச்சான் ஃபஸ்ட் நீ சொல்லு ஏன் இந்த சேஞ்ச் எனக்கு தெரியனும்”
அட ஒரு சஸ்பென்ஸ் வச்சா விட மாட்டியே அது ஒன்னும் இல்ல மச்சான்,, நம்ம ஊருக்கு புதுசா ஒரு கலெக்டர் வந்துருக்காரு எல்லாம் அவர் வேலைதான்!! என்றான்,
,அதற்கு கந்தன் என்ன?!! இதுக்கு முன்னாடி எல்லாம் கலெக்டர் வரலியாக்கும் அவுங்க எல்லாம் பண்ணாதத புதுசா வந்தவர் முடிச்சுட்டாராக்கும்!!!.. நம்பற மாறி கதைய அளடா!!!,,
“நீ நான் சொன்னா நம்பமாட்ட கந்தா ஆனா உண்மை அதுதான் அந்த கலெக்டர் பேர் வாசுதேவகிருஷ்ணன் அவரு ஒரு மிலிட்டிரி ஆபிசரோட பையன் சின்ன வயசிலிருந்த கனவு ஆறு மாசத்தில் நிறைவேத்திட்டாரு,, நான் கூட பேப்பர்ல படிக்கறப்ப இதெல்லாம் சாத்தியம் ஆகாதுன்னுதான் நினைச்சேன். ஆனா பாரு கலெக்டர் சாதிச்சுட்டாரு, ஏதோ சின்ன வயசு கனவாம்,, நீ நம்பலன்னா போ, தினமும் நீயூஸ் பேப்பர் படிப்பயில்ல அப்ப பாரு தெரிஞ்சுகுவ” என்றான் முகேஷ்.
ஒ! ஓகோ! அப்படியா என்ன ஒரு அதிசயம்! எப்படி இப்படி சாத்தியமா!!! முகேஷ்? என்று கந்தன் வினாவியதும்,..
இதைதான் ஜனங்க கேட்டாங்க, ஆனா அவரு விடல, வீதி வீதியா போனாரு, வாரம் ஒரு டிஷ்கசன், ஸ்டுடண்ட் மீட்டிங், பெர்மனன்ட் கேம்ப், ஸ்கூல், காலேஜ்,,, ஒரு பெரிய டீம் டிஷ்கசன் அரேஞ் பண்ணாரு, டீம் பிரிச்சாரு, கவர்மெண்ட் ஆஃபிசர்ஸ் எல்லாம் ஃபஸ்ட்டு எப்படி மந்தமா இருந்தாங்க, ஆனா! அவங்க அப்படியே மாறிட்டாங்க. மாத்த வச்சது நம்ம வாசுதேவன் சார் தான்.
இப்பயெல்லாம் கவர்மெண்ட் ஆஸ்பிடல்ல கூட நம்ம ஸ்டுடண்ட்ஸ் இருக்காங்க, டிஸ்டிக்ல இருக்குற ஆல் ஸ்கூல், காலேஜ், ப்ரைவெட் அன்ட் கவர்மெண்ட் ஸ்டுடண்ட்ஸ் எல்லாரும் இப்பவே சமூக அக்கறையோட இருக்க பழக்கி விட்டுட்டாரு, அவருக்கு நிறைய ப்ராப்ளம்ஸ் எல்லாம் வந்துச்சாம்பா, ஆனா அவரு அதையெல்லாம் தாண்டி தான் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துருக்காரு. பாரு அவரோட க்ளவர் மைண்டு. இப்போ அவரு வேற டிஸ்டிரிக்கு போனாலும் அவரு விதைச்ச சோசியல் ரெஸ்பான்சிபிலிடி எப்பவும் மாறாது, ஏனா எல்லாரும் எல்லாத்தையும் கத்துக்குற மாறி பண்ணியிருக்காரு, சக்சாஸ்ஃபுல்லா லாஞ்ச் பண்ணிட்டாருடா.
கந்தா நாடு எங்கயோ போகுதோ இல்லையோ நம்ம டிஸ்டிரிக் பெரிய அளவுல வரப்போகுது”. என்றான் முகேஷ்.
ம்.. ம்.. நாடு உருப்பட்டு போகும் போ. சரி நான் ரெஃப்ரஸ் ஆயிட்டு வந்து பேசறேன் என்றான் கந்தன். அதற்கு முகேஷ் நியூஸ் பேப்பரோடு தலையை ஆட்டினான்.
மீண்டும் கந்தன் வெளியே வர கந்தனைப் பார்த்து “மச்சான் குட் நீயூஸ், நம்ம டிஸ்டிரிக் டீடைல்ஸ் மக்களுக்கு ஈஸியா கிடைக்கிற மாதிரி வெப்சைட் வேணுமாம், டென்டர் கேக்குறாங்க நாம ஃப்ரியா பண்ணி தருவோம் ஏதோ… நம்மலால முடிஞ்சுது. அதற்கு கந்தன் சுயர் டா மச்சான் அது நம்ம டியுட்டீ, சரி வா நம்ம வாசுதேவன் சார மீட் பண்ணி கேட்போம்., ஓகே டன், பிறகு இருவரும் கலக்டர் ஆஃப்பீஸ் சென்றனர். அறையினுள்ளே சென்றதும் கந்தனுக்கு திகைப்பு! அமைதி… பத்து நொடி வரை,,, ஆட்சியாளர் ” ஏ!… நீங்க!… நீங்க!… மிஸ்டர் கந்தன் தானே?”, என்றதும், அதிசயம், மகிழ்ச்சி, வெட்கம், வேதனை, தலை குனிந்தான் கந்தன், ஆனாலும் அதை பொருட்படுத்தாமல்…
“ஏ எப்படி இருக்கீங்க?” என்றார் வாசுதேவன்…
ஆனால் அதற்கு பதில் கூறும் முன் “சார் உங்களூக்கு எங்க கந்தன தெரியுமா?” என்று குறுக்கிட்டான் முகேஷ்.
“ஆமாங்க இவர் என்னோட கிளாஸ்மெட் ஃப்ரண்டு சார், இப்ப இவரு உங்க ஃப்ரண்டா சார்?” என்று பெருமிதத்துடன் வாசுதேவன் பதில் தர ,,
வாவ் தேங்க்ஸ் சார் இப்போ வரைக்கும் கந்தனோட நட்ப மறக்காம இருந்ததுக்கு என்று முடித்தான் முகேஷ்.
பின்பு…
என்ன மன்னிச்சிரு வாசுதேவா, நா உன்ன புரிஞ்சுகாம ஹர்ட் பண்ணிட்டேன் ஃபட் நீ நிரூபிச்சுட்ட இவ்வாறு கந்தன் பேசியதும்,,,
ஏ!! என்னப்பா, நீ சொன்ன சொல்தான் எனக்கு பூஸ்ட்பா, அதனால தான் நான் கொஞ்சம் உறுதியா செஞ்சேன் என கூறி. பின் கலக்டர் இருவரையும் உபசரித்து மாவட்டத்திற்கான மென்பொருள் சேவையை இலவசமாக செய்து தரும் பண்பை பாராட்டி இருவரையும் பெருமிதத்துடன் அனுப்புகையில் கந்தனை நோக்கி பழைய நட்புடன் குறுநகைத்து வழியனுப்பினார்.
வரும் வழியில் கந்தன் சிந்தனையில் ஆழ்கிறான்…..
பள்ளியில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் வாசுதேவன் நடத்திய விழிப்புணர்வு நாடகம் பரிசினை வென்றது.வகுப்பில் அனைவரும் வாசுதேவனை புகழ ஒரே ஒரு குரல் மட்டும் “வாசுதேவா!!! நீ நடத்துன நாடகம் எக்ஸ்சலண்ட் ,,ஆனா நடைமுறை வாழ்க்கைக்கு செட் ஆகாது. ஸ்டேஜ்ல உனக்கு கைத்தட்டி என்கரேஜ் பண்ற யாரும் ரியல் லைஃப்ல ஏத்துக்க மாட்டாங்க அண்ட் ஃபாலோ பண்ண மாட்டாங்க ஸோ டோண்ட் வேஸ்ட் யுவர் எனர்ஜி,நான் பொறாமைல பேசுல,
மாறல் வேல்யூ மறந்த மக்கள் கிட்ட நாம் என்னதான் பேசுனாலும், கத்தினாலும் ,, இவங்க திருந்தமாட்டாங்க,, இவங்க உருப்பட்டமாரிதான் போ!!! “ என எச்சரித்த காட்சிகள் கண்களில் ஒடின. ஆனாலும் பள்ளிவயதில் வாசுதேவன் அன்று பட்ட அறிவுரையை ,,, இன்று பொய்யாக்கியதை எண்ணி இதயத்து அரையில் ,,,உண்மையிலே இந்த நாடு உருப்பட்டு போகும் வாசுதேவகிருஷ்ணா…….!!!
நீ ஜெயிச்சட்ட,,சாரிடா என்று இரு சொட்டு கண்ணீரோடு பூரித்து தன்னம்பிக்கையோடு அறைக்கு கிளம்பினான்