வேகமாக பரவும் அடுத்த வைரஸ்…அதிர்சியில் உலக மக்கள்
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மேலும் புதுச்சேரியில் நாளை (10-01-2022) முதல் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மூடப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து ‘டெல்டாக்ரான்’ என்ற பெயரில் மற்றொரு வைரஸின் திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக அளவில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைப்ரஸ் நாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் டெல்டா மற்றும் ஒமிக்ரான் கலந்த ஒரு புதிய மாறுபாட்டைக் கண்டுபிடித்துள்ளனர்.
இவை கொரோனா. டெல்டா வகையை விட ஆபத்தானது என்றும், வேகமாக பரவக்கூடிய தன்மைக் கொண்டது என்றும் ஆராய்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் மக்கள் பாதுகாப்புடனும் எச்சரிகையுடனும் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவின் முதல் தாக்கத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், அடுத்தடுத்த புதிய வைரஸ்கள் பரவி வருவதாக பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு:- பொதுஇடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்லுங்கள், மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனாவுக்கு எதிரான போரில் அரசுக்கு உதவுங்கள்