ஒட்டிய கன்னம் மொழுமொழுனு பிரகாசிக்க..!!
நாம சாப்பிடற உணவு எப்படி இருக்கிறது என்பதை சுவை பார்த்து நாம் தான் தீர்மானிக்கிறோம். அதை வைத்து தான் நம் குடும்பத்தையும் கவனிப்போம். ஒவ்வரு நாளையும் சுவை மிக்கதாக மாற்றுவது உங்கள் கைகளில் தான் உள்ளது.
சப்போட்டா மிகவும் சுவையாகவும், இன்னும் சாப்பிட தோணும் இந்த பழத்தை சாப்பிட்டால் கன்னம் பளபளக்கும். பழம் மட்டும் இல்லாமல் இதன், தோலும் சக்தி வாய்ந்தது. சப்போட்டா தோல் காயவைத்தது, சப்போட்டா கொட்டை ஐம்பது, புங்கங்காய் கொட்டை நீக்கியது, கொட்டை எடுத்த கடுக்காய் ஐம்பது, வெந்தயம், செம்பருத்தி பூ காய்ந்தது தலா நூறு கிராம். எடுத்து நன்கு காய வைத்து மிஷினில் அரைத்து கொள்ளவும்.
தோல் வறட்சி நீங்கும்.
இதை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கும் போது, சீயக்காய் பதிலாக, இந்த பொடியை தேய்த்து குளிக்க, நுனி முடி பிளவு நீங்கி, முடி வறட்டு தன்மையை போக்கி, கூந்தல் பளபளப்பாக மாறும். உடம்பு சூட்டை தணிக்கும், குளிர்ச்சி தரும். நம் வீட்டு தோட்டத்தில் உள்ள சப்போட்டா இருக்க இனி பார்லர் போக வேண்டியது இல்லை. இப்பழத்தின் சதை, விளக்கெண்ணெய் சேர்த்து கை, கால் நகங்களில் தேய்த்து ஊற வைத்து குளிக்க நகங்கள் மிளிரும். தோல் வறட்சி நீங்கும்.
சப்போட்டா கொட்டை தைலம்
பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகி, கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்று எரிச்சல், மூல நோய் நீக்கும். மலச்சிக்கலை போக்கி சிறந்த நோய் நிவாரணியாக இருக்கும். சப்போட்டா கொட்டை பொடி, நல்லெண்ணெய், மிளகு சேர்த்து காய்ச்சி வடிகட்டிய எண்ணெயை தலைக்கு தேய்த்து ஊற வைத்து சிகைக்காய் போட்டு குளித்து வர கொத்து, கொத்தாய் முடி கொட்டும் பிரச்சனை தீரும். சப்போட்டா கொட்டை தைலம் இதன் பெயர்.
கன்னம் பளபளன்னு இருக்கும்
ஒரு ஸ்பூன் பழுத்த சப்போட்டா விழுதுடன், கடலை மாவு, பால் கலந்து வாரம் இருமுறை முகத்திற்கு போட்டு வர முகம் பளபளப்பாகும். சப்போட்டா சதையுடன், சந்தன தூள், ரோஸ் வாட்டர் கலந்து முகம் கழுத்தில் பூசி காய விட்டு சுடுநீரில் கழுவவும். வாரம் இரு முறை இதை செய்தால் கன்னம் பளபளன்னு இருக்கும். சப்போட்டா சதையுடன் பால் சேர்த்து அரைத்து வெள்ளரி விதை பவுடர் கலந்து குளிக்கும் முன் கை முழங்கையில் தடவி காய வைத்து குளிக்க கை பொலிவு பெரும். சப்போட்டாவின் ஈர பதம் இருக்கும்.
சருமத்தை மிருதுவாக்கி, அழகுக்கு அழகு சேர்ப்பதில் சப்போட்டா சிறந்து விளங்குவதால் பெண்கள் கவலை கொள்ள வேண்டியது இல்லை. இதை அடிக்கடி உண்பதாலும் அதன் கொட்டை, தோல் வீணாகாமல் வெளி பகுதிக்கு உபயோக படுத்துவதாலும் இதன் முழு சத்தை நாம் பெற முடிகிறது. செழிப்பான கன்னம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இதை செய்யுங்க.
மேலும் படிக்க
இருமலில் பலவகை இருந்தாலும், அத்தனை இருமலுக்கு ஒரே தீர்வு..!!
Really a great article, helped me a lot.