சனிப்பெயர்ச்சி 2023 பல்லடம் கோளறுபதி கோட்டையில் குவிந்த கோடிக்கணக்கான பக்தர்கள்
சனீஸ்வரரை காண குவிந்த பக்தர்கள்; பல்லடம் அருகே சித்தம்பலம் நவகிரக கோட்டையில் கலைக்கட்டிய தரிசனம்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் சித்தம்பலத்தில் உலகிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள கோளறுபதி நவகிரக கோட்டையில் சோபகிருது வருட சனி பெயர்ச்சி விழா சனிபகவான் மேள வாத்தியங்கள் முழங்க தெப்பக்குளத்திற்கு எடுத்துவரப்பட்டு விஷயங்கள் செய்யப்பட்டு டிசம்பர் 20 ஆம் தேதி மாலை வாக்கிய பஞ்சாங்கப்படி 5.20 மணிக்கு ஸ்ரீ சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார்.ஏற்கனவே திருகணித பஞ்சாங்கங்கபடி ஜனவரி 17ஆம் தேதி 2023 அன்று பெயர்ச்சியானார்.
சனி ஈஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து அலங்கரிக்கப்பட்டு மஹர தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரிகார பூஜைகள் செய்த பிறகு புனித தீர்த்தத்தினை எடுத்துச் சென்று சனி பகவானுக்கு தீர்த்த கலசாபிஷேகம் செய்து வழிபட்டனர்..
இதன் தொடர்ச்சியாக சனி பகவான் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் பின்னர் சனி பகவானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.