செவ்வாய் பகவானை வழிபடும் முறை. ஏன் வழிபட வேண்டும்..
செவ்வாய் பகவானை வழிபடும் முறை ஏன் வழிபட வேண்டும். சுப தொடர்புகள் ஏதும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிற கிரகங்களில் செவ்வாயும் மிக முக்கியமான கிரகமாகும்.
அதே சமயம் மிக வலிமையாக வினையாற்ற கூடிய கிரகமும் இது தான். செவ்வாய் உச்சத்தில் இருப்பதால் இயல்பாகவே குடித்தனங்கள் அதிகமாகி விடும் என்று கூறப்படுகிறது.
ஒருவருக்கு செவ்வாய் பார்வை குறைவாக இருந்தால் அவர்களுக்கு பிறரை ஏமாற்றி நிலங்களை அபகரிப்பது, கொலை செய்யத் தூண்டுவது, கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுவது, பணம் வழிப்பறி செய்வது, கற்பழிக்க முயற்சிப்பது போன்றவற்றை செய்ய தூண்டுவது செவ்வாய்.
மற்றவர்களுக்கு பில்லி சூனியங்கள் வைப்பது போன்ற தகாத காரியங்களை செய்ய செவ்வாய் உங்களை தூண்டுவார். யார் சொல்வதையும் காது கொடுத்து கேட்காமல், தான் சொல்வது தான் சரி என்ற பிடிவாதம் பிடிப்பது, விபத்துக்களை ஏற்படுத்துதல், மருத்துவ செலவுகளை அதிகப்படுத்துதல், போன்ற பல்வேறு இடர்பாடுகளை செவ்வாய் உங்களின் மூலமாக மற்றவர்களுக்கு, மற்றவர்கள் வாயிலாக உங்களுக்கும் ஏற்படுத்துபவர்.
சில சமயங்களில் தன்னுடைய வலிமைக்கு ஏற்றவாறு நற்பலன்களையும் தருபவர். ஒருவேளை உங்களுக்கு செவ்வாய் பலம் குறைவாக இருந்தால் என்று வைத்துக் கொண்டால் உங்களை விடவும் உங்களை சுற்றியுள்ளவர்களை அதிகமாக பாதிப்படையச் செய்வார்கள்.
அந்த பாதிப்புகள் எல்லாவற்றுக்கும் நீங்களே காரணகர்த்தாவாக இருக்கும் படி பார்த்துக் கொள்வார். எனவே இதுபோன்ற சங்கடங்களில் இருந்து விடுபடுவதற்கு தொடர்ந்து செவ்வாய்கிழமைகளில் செவ்வாய் ஓரை காலை 6 – 7 அன்று முருகப்பெருமானையும், நவக்கிரகங்களில் உள்ள செவ்வாய் பகவானையும், வழிபட்டு இவர்களுக்குரிய மந்திரங்களை உச்சரித்து வருவதால் இவர்களின் அருள் பார்வை கிடைப்பதோடு மேற்கண்ட பாதிப்பில் இருந்து மீள முடியும்.