சினிமாசின்னத்திரைசெய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்

Actress Chaithra Reddy : கோவையை கலக்கும் சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி

சர்வதேச தரத்தில் அழகுக்கலை நிபுணர் பயிற்சி வழங்கும் லாக்மே அகாடமி’ கோவை காந்திபுரத்தில் தனது புதிய கிளையை துவங்கியது இதனை
சின்னத்திரை நட்சத்திரம் சைத்ரா ரெட்டி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

சர்வதேச தரத்திலான அழகுக்கலை நிபுணர் பயிற்சியை வழங்கும் லாக்மே அகாடமி, கோவை காந்திபுரம் பகுதியில் இன்று தனது புதிய கிளையை துவங்கியது. இதனை சின்னத்திரை நட்சத்திரம் சைத்ரா ரெட்டி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.. தென்னிந்தியாவில் முதல்முறையாக அதிநவீன உபகரணங்களுடன் அமைந்துள்ள இந்தப் பயிற்சி மையத்தில், அறிமுகச் சலுகையாக பயிற்சிக் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


உடல்நலன் மற்றும் பராமரிப்பில் அனைவரும் மிகுந்த கவனம் செலுத்தும் தற்போதைய சூழ்நிலையில், அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் உடல்நலன் பராமரிப்பாளர்களின் தேவைகள் அதிகரித்துள்ளது, அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி, தொழில்முனைவோராக உருவாகவும் அழகுக்கலை நிபுணர்களுக்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றது என்றார். மேலும் அழகுக்கலை நிபுணராக வேண்டுமென விரும்புவோரின் கனவுகளை நனவாக்கும் லாக்மே அகாடாமி, உலக தரத்திலான அழகுக்கலை பயிற்சியை வழங்குவதில் முதலிடம் வகிக்கிறது.

அழகுக்கலை, உடல்நலன் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் தலைசிறந்த நிபுணர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கும் லாக்மே அகாடமி, இங்கு பயிற்சி பெறுவோரை சிறந்த அழகுக்கலை நிபுணர்களாக்குவதுடன், தொழில்முறை வல்லுநர்களாகவும் உருவாக்குகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *