சினிமா பாடல்கள்

சீமராஜா படம் பாடல் வரிகள் ஒன்ன விட்ட யாரும்…..

சீமராஜா (Seema Raja), பொன்ராமின் இயக்கத்தில், ஆர். டி. இராஜா தயாரிப்பில் 2018 ஆண்டு வெளியான தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன்சமந்தா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவிலும், டி. இமானின் இசையிலும், விவேக் அர்சனின் படத்தொகுப்பிலும், 13 செப்டம்பர் 2018இல் வெளியானது.

பாடல் வரிகள்:

பெண்: ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து

மேலும் படிக்க : நியூ லியோ லுக்கில் அசத்தும் விஜய்

ஆண்: அடியே கூட்ட தாண்டி
பறந்து வா வெளியில
வெளியில வெளியில…

ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண்: ஆ….ஆ….

ஆண்: ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண்: ஆ… ஆ… ஆ…
உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து

ஆண்: அடியே கூட்ட தாண்டி
பறந்து வா வெளியில
வெளியில வெளியில…

பெண்: வானம் நீ வந்து நிக்க
நல்லபடி விடியுமே விடியுமே
பூமி உன்
கண்ணுக்குள்ள சொன்னபடி
சொழலுமே சொழலுமே

ஆண்: அந்தி பகல் ஏது
ஒன்ன மறந்தாலே
அத்தனையும் பேச
பத்தலயே நாளே

பெண்: மனசே தாங்காம
நான் உன் மடியில் தூங்காம
கோயில் மணி ஓசை
நெதம் கேட்பேன் ரெண்டு விழியில்

ஆண்: ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண்: ஆ… ஆ… ஆ…
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

மேலும் படிக்க : இந்த மாமானோட மனசு….

ஆண்: நேக்கா நீ கண் அசைக்க கண்டபடி
மெதக்குறேன் மெதக்குறேன்
காத்தா நான் உள்ள வந்து ஒன்ன சேர
எடுக்குறேன் எடுக்குறேன்

பெண்: ஒத்த நொடி நீயும்
தள்ளி இருந்தாலே
கண்ண இவ மூடி
போயிடுவேன் மேலே

ஆண்: கடலே காஞ்சாலும்
ஏழு மலையும் சாஞ்சாலும்
காப்பேன் ஒன்ன நானே
கலங்காதே கண்ணுமணியே

பெண்: ஆ… ஆ… ஆ…
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

ஆண்: ஓ… ஓ… ஓ…
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண்: ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *