நல்வினையில் தான் இறைவனைக் காண முடியும்
ஆன்மிகத்தில் ஈடுபடுவோருக்கு முக்கியமாகத் தேவைப்படும் பண்பு. பிறரை மதித்து அவரது துன்மங்களைத் துடைக்கும் மனம். இது பெரும் பூஜை செய்வதற்குச் சமமானது.
மனிதனின் அறிவு,ஆற்றல், இவற்றிற்கு மேற்பட்ட சக்தி உண்டு என்பது வைக்கப்படுகிறது,
நீ ஒன்று சொன்னால் அந்த வார்த்தைகளின் மேல் நீ நம்பிக்கை வைத்து உன்னால் முடிந்ததை செய். நீ சொன்னதற்கு எதிர்மாறாகக் காரியங்கள் நடந்து வரலாம். சூழ்நிலைகள் மாறி வரலாம்.
அன்றன்று ஏற்படுகின்ற இனி ஏற்படப்போகின்ற மாறுதல்களையெல்லாம் உன்னிடம் நீ சொல்லவும் முடியாது. அதைக் கேட்க உனக்குச் சந்தர்ப்பசூல்நிலைகளும் இருக்காது. நீ சொன்னதை உறுதியாகப் பற்றிக்கொண்டால் பல மாறுதலுக்குப் பின் முடிவில் நீ சொன்னது நடக்கும்.
தெய்வம் என்பது என்ன?
நல்வினை.
நல்வினை தெய்வம் போல் வந்து காவல் செய்யும் ,
நல்வினையில் தான் இறைவனைக் காண முடியும்,
இறைவன் அருள் அனைவரையும் ஒன்றாகச் சேர்த்து – பண்டைத் தமிழன் – திருமூலதின் குரல் மீண்டும் ஒலிக்கின்ற ஒரே இடம். உலக மக்கள் எல்லோரும் ஒரே இனம் என்ற உணர்வை கோடிக்கணக்கான உள்ளங்களில் ஆழ விதைத்தவர்கள்.
எண்ணங்கள் உயர்வானவை. மனித நேயமிக்கவை. சமுதாய நோக்கம் கொண்டவை. இறை எந்த பக்தனையும் குறைத்து மதிப்பிடுவதில்லை. தனக்கு நிகராகவே நினைத்து பேசுகிறார்கள்.
எந்த ஒரு சாதனையும் தன்னுடையதாக மட்டும் எண்ணாது கூட்டு முயற்சி என்று கருதி, அதில் ஒவ்வொரு பக்தனின் பங்களிப்பையும் பாராட்டிப் பேசும் குரு இறை மட்டுமே.