சீடன் படம் பாடல் வரிகள் சரவண சமையல்…
சீடன் திரைப்படம் 2011-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சுப்ரமணியம் சிவா எழுத, அமித் மோகன் தயாரித்தார். இத்திரைப்படத்தில் உன்னி முகுந்தன், அனன்யா, சுஹாசினி, விவேக், ஷீலா மற்றும் பலர் நடித்துள்ளனர். 2002-ல் வெளிவந்த ‘நந்தனம்’ என்ற மலையாள படத்திலிருந்து மறு ஆக்கம் செய்யப்பட்ட படமாகும். தனுஷ் இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடல் வரிகள்:
ஓம் ருத்ர நேத்ராய
வித்மகே சக்தி ஹஸ்தாய
தீமகி தன்னோ அக்னி
ப்ரஜோதயாத்
ஆஹா ஆஆ
ஆஆ ச ம க ம ப நி த
ம நி த நி ச ம நி த நி
ச ம நி த நி ச ஆஆ
சரவண சமையல்
இது சர்வ யோகினி
அறுசுவை தருவாள்
அவள் அன்னபூரணி
ஒவ்வொரு கையிலும்
ருசிகள் மாறும் ஒவ்வொரு
ருசியிலும் பசியும் ஆரும்
சமையல் ஆறுவகை
கலையல்லவா தீர தீரனா
ம நி த ப ம க ரி ச
சரவண சமையல்
இது சர்வ யோகினி
அறுசுவை தருவாள்
அவள் அன்னபூரணி
மேலும் படிக்க ; ஜகமே தந்திரம் தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்
எதிலும் உண்டு
கணக்கு நீ நெருப்பை
குறைச்சு வணக்கு
பருப்பு வெந்ததும்
வாசம் வந்ததும்
பாசம் சேர்த்து இறக்கு
மகா இந்த
மசாலாவ மிக்ஸியில
அரைக்காம கொஞ்சம்
அம்மியில அரைச்சிட்டு
வாமா முத்தன்ன கொஞ்சம்
தேங்காவும் உடைச்சி
துருவிட்டு வாங்களேன்
அய்ய காய்கறிய நறுக்கி
கழுவக் கூடாது கழுவி
நறுக்கணும்
ஆஆ ஆஆ
ஆஆ அம்மா செய்யும்
சமையல் அன்பை
ஊட்டி வளர்க்கும்
பாட்டி செய்யும் சமையல்
மருத்துவம் இருக்கும்
தாயை நினைவூட்டினால்
தங்கையோட சமையல்
புதுச் சுவை கூடினால்
அண்ணியோட சமையல்
மனைவி சமைப்பதிலும்
மனசு இருக்கும் தோழி
சமையல் தப்பும்
பிடித்திருக்கும்
ஒவ்வொரு சுவையும்
ஒவ்வொரு உறவும்
மருத்துவம் இருந்தால்
மகத்துவ உணவு
சரவண சமையல்
இது சர்வ யோகினி
அறுசுவை தருவாள்
அவள் அன்னபூரணி
வெண்டக்காய்
பொரியல கொஞ்சம்
தயிர் விட்டு இறக்குன்ன
வையி வழவழப்பான
வெண்டக்கா மொறு
மொறுன்னு இருக்கும்
நண்பன்வீட்டு
உணவு உரிமையாக
இருக்கும் பிள்ளை
போடும் உணவு கடமை
சொல்லி கொடுக்கும்
ஏற்றத் தாழ்வை
போக்கும் சமபந்தி உணவு
பகையை நட்பாக்குமே
எதிரி வீட்டு உணவு
ரசம் கொதிக்கிறதுக்கு
முன்னாடி இறக்கணும்
பண்பாட்டை
உணர்த்திடுமே விழாக்கால
உணவு நம் ஆயுளையே
கூட்டுமம்மா மண்பானை
உணவு
கீரை நிறம்
மாறாம இருக்கணும்னா
கொஞ்சுண்டு வெல்லத்த
சேத்துக்கணும் கொஞ்சம்
தான்
ஒவ்வொரு
உணவும் தனித்தனிச்
சிறப்பு சமையலில்
வாழ்க்கை தத்துவம்
இருக்கு
சரவண சமையல்
இது சர்வ யோகினி
அறுசுவை தருவாள்
அவள் அன்னபூரணி
ஒவ்வொரு கையிலும்
ருசிகள் மாறும் ஒவ்வொரு
ருசியிலும் பசியும் ஆரும்
சமையல் ஆறுவகை
கலையல்லவா தீர தீரனா
ம நி த ப ம க ரி ச
சரவண சமையல்
இது சர்வ யோகினி
அறுசுவை தருவாள்
அவள் அன்னபூரணி
மேலும் படிக்க : கெடயா கெடக்குறேன்… களரி படம்