நவராத்திரி இரண்டாம் நாளின் சிறப்பும்.. அன்னையை வணங்க வேண்டிய வழி முறைகளும்
நவராத்திரிக் கொண்டாட்டம்
இரண்டாம் நாள் நவராத்திரி கொண்டாட்டம் தொடங்கிவிட்டது… இந்த நாளில் ராஜராஜேஸ்வரி தாயவள் வழிபாடு செய்வது சிறப்பாகும். வாழ்வில் மிகுந்த சிக்கலை அனுபவித்துக் கொண்டிருக்கும் பெரும்பாலானோருக்கு இந்த நவராத்திரியில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை இருக்கும் ராகு கால பூஜை வழிபாடு என்பது சிறப்பு தரும்.
நவராத்திரி இரண்டாம் நாள் ராஜராஜேஸ்வரியின் மந்திரங்கள் ஜெபித்து தாயவள் அனுகிரகம் பெற்று அனைவரும் வாழ்வாங்கு வாழ சிலேட்டு குச்சி வாழ்த்துகின்றது.
நவராத்திரி இரண்டாம் நாள் சிறப்பு
நவராத்திரி இரண்டாம் நாள் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தாய் அவளை வணங்கி நாம் அருள் பெறலாம். நவராத்திரி இரண்டாம் நாள் கட்டம் அமைத்து கோலமிட்டு, முல்லைப்பூ அல்லது மருவுப் பூ சாற்றி, புளி சாதம் வைத்து முக்கனியில் ஒன்றான மாம்பழம் தெய்வத்திற்கு படைத்து சுண்டல் வேர்க்கடலை நெய்வேத்தியம் செய்ய வேண்டும். கல்யாணி ராகத்தில் இறைவியை வணங்கி, மஞ்சள் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் நவராத்திரி இரண்டாம் நாள் வருகிறது. பக்தர்கள் அனைவரும் பார்வதி தாயின் மற்றொரு ஸ்வரூபத்தை வணங்கி ஆசிகள் பல பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும்.