கார் கால பருவத்தில் பரவும் தொற்றுக்கும் கொரோனா தொற்றுக்கும் வித்யாசம் என்ன
சாதாரண குளிர்கால தொற்று என்பது காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி என்று தொடங்கி அதிகபட்சமாக ஒரு வாரம் வரை முழுமையாக குணமாகி விடும். தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டன. மழைக்காலத்தில் வரும் குளிர்கால சளியும் மக்களுக்கு அதிகம் வர ஆரம்பிக்கிறது.
இதை காமன் கோல்டு அல்லது ப்ளு என்று அழைக்கிறோம். சாதாரண ஃப்ளூ வுக்கும் கொரோனா தொற்றுக்கும் எப்படி வித்யாசம் கண்டறிந்து கொள்வது. மழைக்கால சளி பிரச்சனைக்கும் ஒரு நாள் தொற்று சளி பிரச்சினைக்கும் என்ன வித்தியாசம் எப்படி கண்டறிவது குறித்து பொதுநல அரசு மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் மூன்று நாட்கள் காய்ச்சல் தொண்டை வலி, உடல் சோர்வு, இருமல் போன்று தொந்தரவுகள் ஒரு வாரத்திற்கு மேல் பிரச்சனை இருந்தால் நாம் இது குறித்து சந்தேகம் கொண்டு பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முக்கியமாக 8 முதல் 15 நாட்களுக்கு உள்ளடக்கிய இரண்டாவது வாரம் கொரோனா தொற்றுக்கான முக்கிய காலம் என்பது அறிகுறி.
கொரோனா தொற்றில் காய்ச்சல் உடல் வலி அசதி சோர்வு ஆரம்பமாகி, நுகர்தல் திறன் இழப்பு, சுவைத்தல் திறன் இழப்பு, வயிற்றுப்போக்கு போன்றவை தென்படுவதற்கு வாய்ப்பிருக்கும். கொரோனா தொற்று பிரச்சனைக்கு முதல் வாரத்தில் குணமாகாமல் முதல் வார இறுதியில் தான் இருமல் அதிகமாகி, மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
கார் கால பருவத்தில் தமிழகத்தை தாக்கும் மற்றொரு நோய் டெங்கு எனும் கொசுவால் பரவும் நோயாகும். குளிர்கால ப்ளூவும், கொரோனாவும் ஒன்றோடு ஒன்று அறிகுறிகள் ஒத்துப் போவதால் காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இவை மூன்றும் தென்பட்டால் உடனே அதற்கான பரிசோதனை செய்துகொள்வது சிறந்தது.
ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை மற்றும் செயல்பாட்டை சீர் குறைப்பதால் ஈறுகளில் ரத்தக் கசிவு, மலத்தில் ரத்தம் கலந்த கருப்பாக செல்வது, வயிறு வலிப்பது போன்ற அறிகுறிகள் தென்படும். உடல் முழுவதும் செம்படை தோன்றலாம்.
முதல் மூன்று நாட்கள் கடுமையான காய்ச்சல் அடித்து திடீரென்று காய்ச்சல் விட்டு உடல் குளிர்ந்தால் டெங்கு குறித்து அலர்ட் ஆக வேண்டும். மூட்டுக்கு மூட்டு கடுமையான வலி ஏற்படும். 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் கடுமையான காய்ச்சல் இருக்கும்.
காய்ச்சல் திடீரென்று குணமாகி விடும். மொத்தத்தில் காய்ச்சல் அறிகுறி தோன்றினால் நாம் எச்சரிக்கையாக இருப்பது உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இவை டெங்குவால் ஏற்படும் அறிகுறிகளாகும்.