கூகுள் மேப்ஸில் இடம் தேடி அடைதல்..?
நீங்கள் விரும்பி தேடிச்செல்லும் வேலை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள், உங்களுக்கு விருப்பமான கோவிலுக்கு போகனும். ஆனால் தெரியாதப் பகுதி எப்படி இடத்தை நாம் சென்றடைய வேண்டும். நம்மில் பல பேருக்கு நாம் போக வேண்டிய இடத்திற்கு வழி தெரிவதில்லை, அந்த வகையில் நாம் செல்லும் வழியில் பல பேரிடம் வழியை கேட்பதுண்டு. அதில் ஒரு சிலர் நீங்கள் போகும் வழி பின்னே என்பார்கள். மேலும் சிலர் முன்னே என்பார்கள். மேலும் சிலர் நீங்கள் தவறான வழியில் வந்து விட்டீர்கள் என்று கூறுவார்கள். இவ்வாறு நாம் விரும்பிய இடத்திற்கு சென்றடைகின்றோமா? என்பதை பற்றி யோசித்து அவர்களுக்காகவே கூகுள் வடிவமைத்து, இன்று வெற்றிகரமாக நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்ற Google Map எப்படி? உங்களுக்கு உதவிகரமாக இருக்கின்றது. என்பதை பற்றி அறிவோம்.
எப்படி அறிந்து கொள்வது
இன்று நாம் செல்லும் முகவரிக்கு சரியான வழியை எப்படி தெரிந்து கொள்வது வாருங்கள் பார்ப்போம்..! முதலில் உங்கள் போனில் location on செய்ய வேண்டும்.
location on செய்த பிறகு உங்கள் போனில் கூகுள் map-> app-> open செய்யுங்கள், அதன் பிறகு நீங்கள் செல்லும் வழியை அங்கு டைப் அல்லது மைக் மூலம் இடத்தின் பெயரை சொல்லுங்கள்.
மேலும் பெயர் கொடுத்தது கூகுள் மேப் உங்களுக்கு ப்ளூ கலரில் நீங்கள் செல்லும் வழிக்கு வழியை காட்டுவது மட்டுமில்லாமல், எவ்வளவு traffic இருக்கிறது என்பதையும் உங்களுக்கு காண்பிக்கும்.
இன்டர்நெட் இல்லை என்றாலும் இந்த ஆப் நீங்கள் off lineலும் பயன்படுத்தலாம். கூகுள் App மூலம் கேப் புக்கிங் செய்து கொள்ளலாம். இதனுடன் நீங்கள் செல்லும் வழிக்கு எவ்வளவு சார்ஜ் ஆகும் என்பதையும் நீங்கள் பார்க்க முடியும்.
வழியை கண்டறிதல்
ஒரு ஈஸியான வழியை தெரிந்து கொள்ள நாம் அனைவரும் இப்பொழுது ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறோம். அந்த வகையில் தங்கள் நண்பர் எந்த இடத்தில் இருக்கிறார்? என்ற வழியை தெரிந்து கொள்ள என்ன செய்யவேண்டும். எவ்வாறு அறியலாம், உங்கள் நண்பர் மொபைலில் லொகேஷன் ஆன் செய்ய சொல்லுங்கள் பிறகு நீங்கள் வாட்ஸ் ஆப் சாட் மூலம் Attach File Click செய்வதன் மூலம் Location Map இருக்கும். அதை live location sharing click செய்வதன் மூலம் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கூகுள் மேப்பில் போட்டோவுடன் காண்பிக்கும்.
இவ்வாறு உங்களது நண்பர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார். அவர் சரியான வழியில் தான் வருகிறார்களா? என்பதை நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் அவர் இருக்கும் வழியில் நீங்கள் எளிதாக போக முடியும்.