வாடகை கேட்ட HOUSE OWNER-க்கு அரிவாள் வெட்டு…
வீட்டு வாடகை கேட்டவரை கத்தியால் குத்திய சம்பவம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்குட்பட்ட உப்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர் சன்னி. இவருக்குச் சொந்தமான வீட்டில் குஞ்சமோன் ஜார்ஜ், அவரது மகன் சஞ்சு ஆகியோர் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் கடந்த மூன்று மாதங்களாக வாடகை பணம் தராமல் இருந்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் சன்னி, அவர்களிடம் ‘வாடகை கொடுங்க, இல்ல வீட்டை பூட்டி சாவியை கொடுங்கள்’ என காட்டமாக கூறியுள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் தகராறு முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுஞ்சுமோன் மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்து கத்தியால் சன்னியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த சன்னி யை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்று அவர் உயிரிழந்தர்.
இது தொடார்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர். குஞ்சுமோன் ஜார்த், சஞ்சு, உறவினர் பென்னி ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர்.