குரூப் 2 தேர்வை அறிவியல் ஹைல்டைஸ் பகுதி 2 படியுங்க!
குரூப் 2 தேர்வை பொருத்தவரை டெடிகேசன் போட்டி தேர்வை வெல்ல வேண்டும் என்ற வேட்கை நீண்ட பொருமை கலங்காத உள்ளம் படிக்கும் உறுதியான முடிவு கொண்டவர்கள் ஜெயிப்பது உறுதி.
தேர்வு முடியும் வரை மொபைல் போன் பயன்பாட்டை குறைத்து கொள்வது அதிகபட்சம் மொபைல் தொடுவதை சுத்தமாக நிறுத்துவது மிகவும் நல்லது. வெற்றி எனற இலக்கை மட்டும் நம்பி பயணியுங்கள் ஒவ்வொருமுறையும் சிலேட்குச்சி இந்தியா அந்த சொல்லை பல்வேறு வழியில் சுட்டிக்காட்ட காரணம். வெற்றி என்ற சொல் மனதில் ஆழ பதியும் பொழுது செயல்பாட்டில் தொடர் முன்னேற்றம் இருக்கும்.
அமினோ அமிலங்கள்
சிறுநீரகம் (kidneys)சுமார் 150 கிராம் எடை கொண்டதாகும். A வகை ஹெப்பாடைட்டிஸ் வைரஸ் (Hepatitis)உடலில்புகுந்த பிறகு சுமார் 15 முதல் 40 நாட்களில் நோயினை வெளிப்படுத்திடுகிறது.
இதுவரை சுமார் 20 வகையான அமினோ அமிலங்கள் (Amino acids)கண்டறியப்பட்டுள்ளன.
சுமார் 9 வகை அமினோ அமிலங்கள் (Amino acids)நமது உடலில் தயாரிக்கப்படுவதில்லை.
தினசரி சுமார் 500 மில்லி லிட்டர் பித்த நீர் (Bile Acids)சுரக்கிறது.கனையம்(Pancreas)சுமார் 60 கிராம் எடை கொண்டது கனையத்தின் நீளம் 12 செ.மீ. முதல் 15 செ.மீ. வரை இருந்திடும்.
குடலில் உள்ள எப்பிதீலியம் செல்கள் 3 முதல் 5 நாட்களில் உதிர்வடைகிறது.
ஜிஜனம் என்னும் சிறுகுடல் (Small Intestine)பகுதி சுமார் 2 மீட்டர் நீளம் கொண்டதாகும்.
டியோடினம் என்னும் குடல் பகுதி சுமார் 25 செ.மீ.நீளமுள்ளது.61.வயிற்றில் சுமார் 2 லிட்டர் கேஸ்ட்ரிக் அமிலம் தினசரி சுரக்கப்படுகிறது.
திசுக்களின் பரப்பளவு
ஈசோபேகஸ் என்னும் விழுங்குழல் சுமார் 25 செ.மீ. நீளம் கொண்டதாகும்.
விழுங்குழல் சுமார் 2 செ.மீ. அகலம் கொண்டதாகும்.
உமிழ்நீரின் pH சுமார் 5.8 முதல் 7.4 வரை இருக்கும்.
உடலில் 70 சதவிகிதம் தண்ணீர் உள்ளன.
65 கிலோ எடை கொண்ட நபர்களின் உடலில் சுமார் 40 லிட்டர் நீர் அமைந்திருக்கும்.உடலில் உள்ள செல்களின் உள்ளே உள்ள மொத்த நீரின் அளவு சுமார் 28 லிட்டர் அளவிற்கு இருந்திடும்.உடலில் உள்ள செல்களுக்கு வெளியே உள்ள செல்கள் சுமார் 12 லிட்டர் அளவிற்கு இருந்திடும்.
வாயு மாற்றத்தில் பங்கெடுத்திடும் நுரையீரல் திசுக்களின் பரப்பளவு சுமார் 70 முதல் 80 சதுர மீட்டர் அளவிற்கு இருந்திடும்.
மூளைத்தண்டு வடம்
உள்ளிழுக்கப்படும் காற்றில் சுமார் 21 சதவிகித ஆக்ஸிஜன் உள்ளன.
வெளிவிடப்படும் காற்றில் சுமார் 16 சதவிகிதம்ஆக்ஸிஜன் அமைந்துள்ளது.
நமது உடலில் விலா எலும்புகள் சுமார் 12 ஜோடிகள் உள்ளன.20 முதல் 20000 ஹெர்ட்ஸ் அளவுகொண்ட ஒலிகளை மட்டுமே நம்மால் கேட்டிட இயலும்.
மூளைக்கு இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் சுமார் 15 சதவிகிதம்அளவு தேவைப்படுகிறது.
மூளைத்தண்டுவடம் சுமார் 45 செ.மீ. நீளமுள்ளது.
மூளைக்கு நிமிடத்திற்கு சுமார் 700 மில்லி இரத்தம் தேவைப்படுகிறது.
மூளைத்திரவத்தின் அடர்த்தி எண் 1.00கும்.
மேலேரும் மகாதமனி சுமார் 5 செ.மீ. நீளமுள்ளதாகும்.
சிஸ்டாலிக் அழுத்தத்திற்கும் டயஸ்டாலிக் அழுத்தத்திற்கும் உள்ள வேறுபாடு பல்ஸ் அழுத்தம் எனப்படும்.
பல்ஸ் அழுத்தம் சுமார் 40.மி.மீ. மெர்குரி என்ற அளவில் இருந்திடும்.
குளுக்கோகார்டிகாய்டு என்னும் உடலின் இயற்கையான ஸ்டீராய்டு உயிர் இரசாயணம் அதிகாலை 4 A.M. to 8 A.M.நேரத்தில் அதிகளவு இருந்திடும்.
குளுக்கோ கார்டிகாய்டு என்னும் உடலின் இயற்கை ஸ்டீராய்டு உயிர் இரசாயணம் நடு இரவு முதல் அதிகாலை 3 மணிவரை மிகக் குறைந்த அளவே இருந்திடும்.
தைராய்டு சுரப்பி சுமார் 20 கிராம் எடை கொண்டதாகும்.
பிட்யூட்டரி சுரப்பி சுமார் 500 மில்லி கிராம் எடை கொண்டதாகும்.
கண்ணீர் சுரப்பியின் வடிகுழாய் சுமார் 2மி.மீ. நீளம் கொண்டதாகும்.
அழுத்தம்
ஒளியின் வேகம் 1800000 கி.மீ. ஒரு நிமிடத்தில் (3.00000 K,M/SEC).
கண்கோளம் சுமார் 2.5 செ.மீ. விட்டம் கொண்டதாகும்.
மூளை திரவம் ஒரு நிமிடத்திற்கு சுமார் 0.5 மில்லி சுரக்கப்படுகிறது.
மூளை திரவம் தினசரி சுமார் 720 மில்லி சுரக்கிறது.
மூளை திரவத்தில் அழுத்தம் படுத்தநிலையில்சுமார் 10செ.மீ. (நீர்) அளவிற்கு இருந்திடும்.
மூளை திரவத்தில் அழுத்தம் நின்ற நிலையில்சுமார் 30செ.மீ. (நீர்) அளவு இருந்திடும்.
இதய பெருவறைகள் ஒரு முறை சுருக்கமடைந்திடும் பொழுது சுமார் 70 மில்லி
இரத்தம் பெரும் இரத்தக் குழாய்களில் வெளியேற்றப்படுகிறது(Stroke Volume).
இதயம் ஒரு நிமிட நேரத்தில் சுமார் 5 லிட்டர் இரத்தத்தை வெளியேற்றுகிறது(Cardiac Output).
உடற்பயிற்சியின்(Exertion)போது இதயம் ஒரு நிமிடநேரத்தில் சுமார் 25 லிட்டர் இரத்தத்தை வெளியேற்றுகிறது.
நல்ல விளையாட்டு வீரர்களின் (Athletic)இதயம் ஒரு நிமிட நேரத்தில் சுமார் 35 லிட்டர் வரை இரத்தத்தை வெளியேற்றுகிறது.
பெருவறைகள்
இதயம் ஒரு நிமிட நேரத்தில் சுமார் 60 தடவைகள் முதல் 80 தடவைகள் வரை சுருக்கமடைகிறது.
இதய பெருவறைகள் சுருக்கமடைந்திட(Cardiac Contraction)சுமார் 0.3 செகண்ட் காலம் ஆகிறது.
இதய பெருவறைகள் விரிவடைந்திட சுமார் 0.4 செகண்ட் காலம் ஆகிறது.
இதயத்தின் நுனிப்பகுதி இடது மார்பின் 5 வது விலா எலும்பு இடைவெளியில் அமைந்துள்ளது.
இதயத்தின் நுனிப்பகுதி (கார்டியாக் அபெக்ஸ்Cardiac Apex)மார்பின் மையப் பகுதியிலிருந்து (Midline)இடது பக்கம் சுமார் 9செ.மீ. தள்ளி இருக்கிறது.