32 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு..!
சுமார் 32 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சுமார் 32 மாதங்களுக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் புதன்கிழமை (மார்ச் 2, 2022) 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக காஷ்மிருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக பள்ளிகள் மூடப்பட்டன், பின்னர் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டிருந்ததால் அங்கு சுமார் 32 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.
இது தொடர்பாக அழகாக பள்ளிக்கு கிழம்பும் 10ம் வகுப்பு மாணவர் சையத் காசிம் கூறுகையில், இன்று பள்ளிக்கு செல்வதில் நான் மிகவும் மகிழ்சியாக உள்ளேன், எனது ஆசிரியர்களையும், நண்பர்களையும் சந்திக்க ஆர்வமாக உள்ளேன், நன்பர்களிடம் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ள போகிறேன் என புன்னகையுடன் தெரிவித்தார்.