நாளை பள்ளிகள் திறப்பு…!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பிப் 1ம் தேது நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதற்கு முன் சுழற்சி முறையில் பள்ளிகள் இயங்கி வந்தன, ஆனால் நாளை முதல் வழக்கம் போல், அதாவது 100 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, பள்ளிகளை திறக்கும் முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், பள்ளி நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. அதன்படி வகுப்பறையில் கிருமி நாசினிகள் கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் அரசு பள்ளிகள் நாளை 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது. இருப்பினும் சில தனியார் பள்ளிகள் 1 முதல் 5 ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில பளிகள் ஆன்லைன் வகுப்புகளை கொஞ்சம் நாட்கள் தொடரலாம் என்ற மன நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக அரசும் ஆதரவளித்துள்ளது. அதாவது பள்ளிகள் திறப்பு குறித்து அந்தந்த பள்ளிகளே முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திரந்தாலும், ஆன்லைன் தேர்வுகளே தொடரும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், நாளை மாணவர்களும், ஆசிரியர்களும் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என சில தனியார் பள்ளிகள் அறிவுறுத்தியுள்ளது. நாளை போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதால் காவல்துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.